பதிவு செய்த நாள்
28 செப்2011
13:12

புதுடில்லி: வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி தடையை மத்திய அரசு நீக்கினாலும், இந்தியாவில் வெங்காய உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. இருப்பினும் சீனா, பாகிஸ்தானுக்கு போட்டியாக வெங்காய உற்பத்தியினை பெருக்க இந்தியா முயற்சித்து வருகிறது. கடந்த 20-ம் தேதியன்று வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி தடையை மத்திய அரசு நீக்கியது. தற்போது உற்பத்தியில் தேக்கநிலை அடைந்துள்ளதால், விலையும் அதிகரித்துள்ளது. இது குறித்து மும்பையை மையமாக கொண்டு செயல்படும் வெங்காய ஏற்றுமதி சங்கத்தினர் கூறுகையில், உலகில் வெங்காய உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டதும், கடந்த 20-ம் தேதி முதல் 27-ம் தேதிவரையிலான காலத்தில் வெங்காய ஏற்றுமதி 4ஆயிரம் முதல் 5 ஆயிரம் டன் வரை உயர்ந்திருக்கும், ஆனால் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டதால் விலையும் அதிகரித்துள்ளது. மேலும் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள், தங்களின் வெங்காய உற்பத்தியினை குறைந்த விலைக்கு , இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.அதற்கு போட்டியாக இந்தியா ஏற்றுமதி செய்ய இயலவில்லை. இதற்கு காரணம் உற்பத்தி வீழ்ச்சி, விலை உயர்வும் தான். எனவே கடும் போட்டி போட வேண்டியுள்ளது. எனவே வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக 475 மில்லியன் டாலர் நிர்ணயம் செய்ய வேண்டும் என்றனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|