சீனா, பாகிஸ்தான் நாடுகளின் போட்டியால்இந்தியாவின் வெங்காய ஏற்றுமதி பாதிப்புசீனா, பாகிஸ்தான் நாடுகளின் போட்டியால்இந்தியாவின் வெங்காய ஏற்றுமதி ... ... "சென்செக்ஸ்' 78 புள்ளிகள் குறைந்தது "சென்செக்ஸ்' 78 புள்ளிகள் குறைந்தது ...
நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி 3.5 சதவீதமாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2011
00:42

புதுடில்லி:சென்ற ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி 3.5 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, சென்ற ஆண்டு இதே காலத்தில் 4.4 சதவீதமாக இருந்தது. இருப்பினும், சென்ற ஜூலை மாதத்தில்,இது, 3.3 சதவீதமாக இருந்தது. ஆக, ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது, ஆகஸ்ட் மாதத்தில் எட்டு முக்கிய துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 0.2 சதவீதம் உயர்ந்துள்ளது. இது தொடர்பாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :சென்ற ஆகஸ்ட் மாதம் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய பொருள்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகிய எட்டு துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி, சென்ற ஆண்டு இதே மாதத்தை விட 1.1 சதவீதம் குறைந்துள்ளது. நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான ஐந்து மாத காலத்தில், முக்கிய எட்டு துறைகளின் ஒட்டு மொத்த வளர்ச்சி 5.3 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, சென்ற 2010-11ம் நிதியாண்டின் இதே காலத்தில், 6.1 சதவீதமாக இருந்தது. ஆக, எட்டு துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி 0.9 சதவீதம் குறைந்துள்ளது. இந்த எட்டு துறைகளில், மின்சாரம், சிமென்ட் ஆகிய இரு துறைகள் மட்டுமே சென்ற ஆகஸ்ட் மாதம் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளன. சென்ற ஆகஸ்ட் மாதம் மின்சாரத் துறை 8.9 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. சென்ற ஆண்டு இதே மாதத்தில் இது 1.6 சதவீதமாக மிகவும் குறைந்து காணப்பட்டது.அது போன்று, சிமென்ட் துறையும் சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளது. சென்ற ஆகஸ்ட் மாதம், இத்துறை 7.2 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. இது, சென்ற ஆண்டு இதே மாதத்தில் 1.6 சதவீதம் என்ற அளவில் குறைந்திருந்தது. உருக்குத்துறையின் வளர்ச்சி, சென்ற ஆகஸ்ட் மாதம் 7.7 சதவீதமாக குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டு இதே காலத்தில் 10.8 சதவீதமாக உயர்ந்திருந்தது. ஆக, உருக்குத் துறையின் வளர்ச்சி 3.1 சதவீதம் குறைந்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், கச்சா எண்ணெய்துறையின் வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்துள்ளது. சென்ற ஆகஸ்ட் மாதம், இத்துறையின் வளர்ச்சி 1.6 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, சென்ற ஆண்டு இதே காலத்தில் 15.2 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது. இத்துறையின் வளர்ச்சி, சென்ற ஆண்டு இதே மாதத்தை விட, 13.6 சதவீதம் குறைந்துள்ளது. நிலக்கரி, இயற்கை எரிவாயு ஆகிய இரண்டு துறைகள், சென்ற ஆகஸ்ட் மாதம் எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளன. சென்ற ஆகஸ்ட் மாதம் நிலக்கரி உற்பத்தி குறைந்ததால், இத்துறை 15.3 சதவீத எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளது. அதேசமயம் சென்ற ஆண்டு, இதே மாதத்தில், இத்துறையின் வளர்ச்சி 1.0 சதவீதமாக இருந்தது. அது போன்று இயற்கை எரிவாயு உற்பத்தியும் சென்ற ஆகஸ்ட் மாதம் குறைந்துள்ளது. இதனால், இத்துறை 5.3 சதவீத எதிர்மறை வளர்ச்சியைக் கண்டுள்ளது. சென்ற ஆண்டு ஆகஸ்ட்டில் இத்துறையின் வளர்ச்சி, 11.9 சதவீதம் என்ற அளவில் இருந்தது.அதே சமயம், பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருள்களின் உற்பத்தி, சென்ற ஆகஸ்ட் மாதம் அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு, இத்துறை 2.3 சதவீத அளவிற்கு எதிர்மறை வளர்ச்சியை கண்டிருந்தது. நடப்பாண்டு, ஆகஸ்ட் மாதத்தில் இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி கண்டு 3.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. உர உற்பத்தியும், சென்ற ஆகஸ்ட் மாதத்தில் நல்ல அளவில் அதிகரித்திருந்தது. உரத்துறை, சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 4.3 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தில், இத்துறை, 5.7 சதவீத எதிர்மறை வளர்ச்சியை கண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.ஒட்டு மொத்த அளவில், நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, ஆகஸ்ட் மாதங்களில் 4.4 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக குறைந்துள்ளது. மேற்கண்ட புள்ளிவிவரங்கள் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார மந்த நிலை, உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் பொருள்களுக்கான தேவையும், செலவினமும் குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், சென்ற ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் 8 முக்கிய துறைகளின் உற்பத்தி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக இத்துறை சார்ந்த வல்லுனர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)