பதிவு செய்த நாள்
29 செப்2011
14:59
வாஷிங்டன்: ஆயுத கொள்முதல் செய்வதில் இந்தியா முதலிடம் வகிப்பதாக அமெரிக்க பாராளுமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த 2010-ம் ஆண்டு வரையில் வளர்ந்து வரும் நாடுளில் 5.08 பில்லியன் டாலர் ஆயுத கொள்ளுமுதல் செய்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் தைவான் 2.07 பில்லியன் டாலர்கள் அளவுக்கு ஆயுத கொள்ளுமுதல் செய்து 2-வது இடத்திலும் , தொடர்ந்து பாகிஸ்தான், சவூதி அரேபியா நாடுகள் உள்ளன. அதே நேரத்தில் கடந்த 2010-ம் ஆண்டு நிலவரப்படி உலக அளவில் பிற நாடுகளுக்கு ஆயுத விற்பனை ஒப்பந்தம் செய்வதில் அமெரி்க்க முதலிடத்திலும், (7.08 பில்லியன் டாலர்) ரஷ்யா இரண்டாமிடத்திலும் உள்ளன. ஆயுதங்கள் மட்டுமின்றி வர்த்தக விமானங்கள் விற்பனையில் அமெரிக்காவும், ரஷ்யாவும் போட்டி போடுகின்றன. இவற்றிற்கு போட்டியாக இங்கிலாந்து, இத்தாலி நாடுகளும் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|