பதிவு செய்த நாள்
01 அக்2011
00:49

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று, மீண்டும் சுணக்கம் கண்டது. ஆக, நடப்பு வாரத்தில், பங்கு வியாபாரம் ஒருநாள் உயர்வதும், மறுநாள் குறைவதும் என்ற நிலைப்பாட்டில் இருந்தது. நேற்று, ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச்சந்தைகளில் வர்த்தகம், மந்தமாக இருந்தது. இது, இந்தியப் பங்குச்சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், அன்னிய மற்றும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்ததாலும், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, சரிவடைந்து போனது. குறிப்பாக, உலோகம், தகவல் தொழில்நுட்பம், வங்கி, பொறியியல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர்வோர் சாதனங்கள் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, ஓரளவிற்கு தேவை காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 244.31 புள்ளிகள் சரிவடைந்து, 16,453.76 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தினிடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,745.16 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,404.78 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய, இரு நிறுவனப் பங்குகள் தவிர, ஏனைய 28 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது. தேசியப் பங்குச் சந்தையிலும் வர்த்தகம், மந்தமாக இருந்தது. இப்பங்குச்சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 72.20 புள்ளிகள் சரிந்து, 4,943.25 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தினிடையே அதிகபட்சமாக, 5,025.55 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 4,924.30 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|