பதிவு செய்த நாள்
01 அக்2011
10:53

புதுடில்லி : ஹிட்டாச்சி ஓம்ரன் டெர்மினல் சொல்யூஷன்ஸ் கார்ப் என்னும் ஜப்பானிய நிறுவனம், உலக முழுவதும் பண சேமிப்பு ஏ.டி.எம்., மையங்களை நிறுவ இந்தியாவின் முன்னணி வங்கிகளான எஸ்.பி.ஐ., மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. ஏ.டி.எம்., மூலம் நேரடியாக பணத்தை வங்கி கணக்கில் செலுத்துதல், பாஸ்புக்கில் பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை குறைந்த நேரத்தில் பெறும் டூ இன் ஒன் வசதி கொண்ட ஏ.டி.எம்.,கள் அமைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஹிட்டாச்சி தெரிவித்துள்ளது. இதன் மூலம் கிளைகள் விரிவுபடுத்தப்படுவதுடன், வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிக்கவும், வங்கி பணியாளர்கள் பிற வேலைகளை விரைந்தது முடிக்கவும் வழிவகை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஏடிஎம்.,கள் மூலம் ஒரு பில்லியன் யான் வரை வருமானம் பெறுவதற்காக அடுத்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 8 வங்கிகளுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தவும் ஹிட்டாச்சி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|