பதிவு செய்த நாள்
01 அக்2011
15:33

புதுடில்லி : செப்டம்பர் மாதத்தில் ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனை 9.45 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் 10,270 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதே போன்று இந்நிறுவனத்தின் வாகன ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் 9383 கார்களை மட்டுமே ஃபோர்டு நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் புதிய மாடல்களான ஃபோடு ஃபியஸ்டா மற்றும் ஃபோர்டு ஃபீகோ ஆகிய கார்களின் மவுசு அதிகரித்து வருவதே விற்பனை விகித அதிகரிப்பிற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஃபோர்டு நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 6.9 சதவீதம் சரிவடைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் தனது மொத்த வாகன விற்பனையை 1,00,000 ஆக உயர்த்த ஃபோர்டு இந்தியா நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை 90,612 கார்களை ஃபோர்டு நிறுவனம் விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|