பதிவு செய்த நாள்
02 அக்2011
13:39
புதுடில்லி : டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செப்டம்பர் மாத வாகன விற்பனை 22 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 78,786 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இருப்பினும் இந்நிறுவனத்தின் சிறிய ரக காரான நானோ விற்பனை 47 சதவீதம் சரிவடைந்துள்ளது. 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 64,668 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. உள்நாட்டு வாகன விற்பனை 10.22 சதவீதம் அதிகரித்து 26,319 ஆக உள்ளது.டாடா மோட்டார்சின் இண்டிகா கார் விற்பனை 64 சதவீதமும், சுமோ, சஃபாரி, ஆர்யா உள்ளிட்ட கார்களின் விற்பனை 60 சதவீதமும் அதிகரித்துள்ளது. உள்நாட்டில் கனரக வாகன விற்பனை 29 சதவீதம் அதிகரித்து 46,247 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதே போன்று வாகன ஏற்றுமதியும் 23 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|