பதிவு செய்த நாள்
09 அக்2011
01:17
மும்பை:உலகளவில் காபி ஏற்றுமதியில், இந்தியா 4வது இடத்தை பிடித்துள்ளது. சென்ற ஆகஸ்ட் மாதம், இந்தியாவின் காபி ஏற்றுமதி, 3 லட்சத்து, 85 ஆயிரத்து, 265 மூட்டைகளாக (ஒரு மூட்டை-60 கிலோ) உள்ளது. இது, முந்தைய ஜூலை மாதம் 4 லட்சத்து 68 ஆயிரத்து 603 மூட்டைகள் என்ற அளவில் இருந்தது. சர்வதேச அளவில், காபி ஏற்றுமதியில், பிரேசில் முதலிடத்தில் உள்ளது. இந்நாட்டின் காபி ஏற்றுமதி, சென்ற ஆகஸ்ட் மாதம் 28 லட்சத்து 67 ஆயிரத்து 486 மூட்டைகள் என்ற அளவில் இருந்தது. இரண்டாவது இடத்தில் உள்ள வியட்னாம் 9 லட்சத்து 50 ஆயிரம் காபி மூட்டைகளை ஏற்றுமதி செய்துள்ளது. பெரு மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்நாடு, சென்ற ஆகஸ்ட் மாதம் 4 லட்சத்து, 50 ஆயிரம் காபி மூட்டைகளை ஏற்றுமதி செய்துள்ளது. காபி ஏற்றுமதியில் கொலம்பியா, 5ம் இடத்தில் உள்ளது. இந்நாடு, 3 லட்சத்து 83 ஆயிரத்து 618 காபி மூட்டைகளை ஏற்றுமதி செய்துள்ளது. அடுத்த இடங்களில் இந்தோனேஷியா (3 லட்சத்து 50 ஆயிரம் மூட்டைகள்), உகாண்டா (3லட்சத்து 8 ஆயிரத்து 739), கவுதமாலா (2 லட்சத்து 39 ஆயிரத்து 534), மெக்சிகோ (2 லட்சத்து 15 ஆயிரத்து 247) நாடுகள் உள்ளன. காபி ஏற்றுமதியில் பத்தாவது இடத்தில், ஆப்பிரிக்காவை சேர்ந்த எத்தியோப்பியா உள்ளது. இந்நாடு, சென்ற ஆகஸ்ட் மாதம், 2 லட்சத்து 3 ஆயிரத்து 696 காபி மூட்டைகளை ஏற்றுமதி செய்துள்ளது. சென்ற ஆகஸ்ட் மாதம் உலக நாடுகள், 72 லட்சத்து 5 ஆயிரத்து 905 காபி மூட்டைகளை ஏற்றுமதி செய்துள்ளன. இது, முந்தைய ஜூலை மாதம், 74 லட்சத்து 4 ஆயிரத்து 813 மூட்டைகள் என்ற அளவில் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|