பதிவு செய்த நாள்
09 அக்2011
16:23

மும்பை: நடப்பு நிதி ஆண்டில், செப்டம்பர் 23ம் தேதி வரையிலான காலத்தில், இந்திய வங்கிகள் வழங்கிய கடன்கள் 19.5 சதவீதம் அதிகரித்துள்ளது. வங்கிச் சேவை துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாரத ரிசர்வ் வங்கி, வாரந்தோறும் வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இந்த வகையில், கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதியுடன் நிறைவடைந்த இரண்டு வாரத்திற்கான புள்ளி விவரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இரு வார காலத்தில் இந்திய வங்கிகள் வழங்கியுள்ள கடன்கள் ரூ.18,860 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதி ஆண்டின் இதே காலத்தில் வழங்கப்பட்டிருந்த கடன்களை விட 19.5 சதவீதம் அதிகமாகும். நடப்பு ஆண்டில், செப்டம்பர் 23ம் தேதி வரையிலான காலத்தில் வங்கிகள் வழங்கியுள்ள மொத்த கடன்கள் ரூ.40.93 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. உணவு தானிய கொள்முதலுக்காக, இந்திய உணவு கழகத்திற்கு வழங்கப்பட்ட கடன் ரூ.5,171 கோடி குறைந்து ரூ.68,245 கோடியாகவும், உணவு அல்லாத கடன்கள் ரூ.24,030 கோடி அதிகரித்து ரூ.40.25 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது. வங்கிகள் திரட்டிய டெபாசிட்டுகள் ரூ.8,232 கோடி அதிகரித்து ரூ.55.30 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 17.4 சதவீதம் அதிகமாகும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|