பதிவு செய்த நாள்
10 அக்2011
02:37

புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த என்.எம்.டீ.சி. நிறுவனம் சுரங்க நடவடிக்கைகள் மூலம், தாதுப் பொருட்கள் உற்பத் தி யில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனம், உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலும், 2,450 கோடி ரூபாய் திட்ட செலவில், பல்வேறு வரிவாக்க திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம், இந்தியாவிலுள்ள அனல் மின் திட்டங்களுக்கு தேவையான சிறப்பு வகை நிலக்கரி உற்பத்திக்காக, அமெரிக்க நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை பெறுவதற்காக, பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது. தான்சானியா நாட்டில் தங்க சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, கூட்டு நிறுவனம் ஒன்றை தொடங்கும் திட்டத்திலும் தீவிரமாக உள்ளது. இந்நிறுவனம், இரும்புத் தாது உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், பல்வேறு விரிவாக்க திட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது. இதையடுத்து, இதன் இரும்புத் தாது உற்பத்தி திறன், ஆண்டுக்கு 5 கோடி டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|