பதிவு செய்த நாள்
10 அக்2011
02:38

சர்வதேச அளவில், மொபைல்போன் சேவையில் ஈடுபட்டு வரும் வோடபோன் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் இங்கிலாந்தில் உள்ளது. இக்குழுமம் ஐந்து கண்டங்களில், 30க்கும் மேற்பட்ட நாடுகளில், 40க்கும் அதிகமான பங்குதார நிறுவனங்களுடன் மொபைல் போன் சேவை அளித்து வருகிறது. உலகளவில், இந்நிறுவனத்தில், 84 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஜூன் மாத நிலவரப்படி இந்நிறுவனம், தனிப்பட்ட மற்றும் கூட்டாண்மை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சந்தைகளி லுமாக, 37 கோடி வாடிக்கையாளர்களுக்கு மொபைல் போன் சேவை வழங்கி வருகிறது.வோடபோன் குழு மம், 1994ல், அதன் முந்தைய மேலாண்மை நிறுவனமான ஹட்சிசன் எஸ்ஸார், மும்பைக்கான செல்லுலார் உரிமத்தை வாங்கியதை தொடர்ந்து, இந்திய சந்தையில் களமிறங்கியது. பின்பு, 2007ம் ஆண்டு வோடபோன் எஸ்ஸார் என்ற பெயரில், நாடு தழுவிய அளவில் அதன் செயல்பாடுகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. வோடபோன் நிறுவனம்,தற்போது இந்தியாவில் உள்ள, 23 தொலைத் தொடர்பு வட்டங்களிலும்,மொபைல் போன் சேவையில் ஈடுபட்டு வருகிறது. மொபைல் போன் சேவைக்காக நாடு தழுவிய அளவில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான தகவல் ஒருங்கிணைப்பு கோபுர வசதிகளை கொண்டுள்ளது. உள்நாட்டில் இந்நிறுவனத்திற்கு, 14.30 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதையடுத்து, இத்துறையில் இந்நிறுவனத் தின் சந்தை பங்களிப்பு 16.6 சதவீதம் என்றளவில் உள்ளது.வோடபோன் நிறுவனம்,மொபைல் சேவையுடன், பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளையும் அளித்து வருகிறது.இதனால், இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக் கை சிறப்பான அளவில் அதிகரித்து வருவதாக, இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார். இந்தியாவில் தற்போது மொபைல்போன் சேவைத் துறையில் ஏர்டெல், ஏர்செல், வோடபோன், பி.எஸ்.என்.எல்., எடி சாலட், ஐடியா, லூப், எம்.டி.என்.எல்.,எஸ்டெல், யூனிநார், டாட்டா டெலி, ரிலையன்ஸ், எம்.டி.எஸ்.,மற்றும் வீடியோ கான் உள்ளிட்ட, 14 நிறுவனங்கள் உள்ளன.நாடு தழுவிய அளவில், மொபைல் போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக் கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையான, 125 கோடியில், 85 கோடி பேர், மொபைல் போன் சேவையை பெற்றுள்ளனர். இருப்பினும், மேற்கண்ட ஒட்டு மொத்த எண்ணிக்கையில், 50 கோடி வாடிக்கையாளர்களே மொபைல் போனை சிறந்த அளவில் பயன்படுத்து கின்றனர். மீதமுள்ள வாடிக்கையாளர்கள் கூடுதல் சிம்கார்டுகளை வைத்துள்ளனரே தவிர, அவற் றை முழு அளவில் பயன்படுத்துவ தில்லை.நகர்புறங்கள் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் இன்று மொபைல் போன் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது. பேசுவதற்கு மட்டுமின்றி, குறுந்தகவல்கள் அனுப்புவது, இன்டெர்நெட் பயன்பாடு, டி.வி., மற்றும் செய்திகளை அறிந்து கொள்வது என, பல பரிமாணங்களுடன் மொபைல் போன் சேவை மக்களுடன் ஒன்றிப் போய் உள்ளது. தமிழ்நாடு: வோடபோன் நிறுவனம், தமிழ்நாட்டில், 16 சதவீத பங்களிப்புடன், முன்னணி மொபைல் போன் நிறுவனங் களில் ஒன்றாக திகழ்கிறது. தமிழ்நாடு செயல்பாடுகள் குறித்து, வோடபோன் எஸ்ஸார் சவுத் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஆர்.சுரேஷ் குமார் கூறியதாவது:வோடபோன் நிறுவனம், தமிழ்நாட்டில் இரண்டு மண்டலங் களாக செயல்படுகின்றன. அதாவது, சென்னை மற்றும் இதர தமிழ்நாடு என்ற இரண்டு பிரிவுகளின் கீழ், மொபைல் போன் சேவையில் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டில், நிறுவனத்தின் செயல்பாடு நல்ல அளவில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக இங்கு, நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் நல்ல அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. தற்போது தமிழ்நாட்டில், நிறுவனத்தின் மொபைல் போன் சேவையை, 1.15 கோடி பேர் பெற்றுள்ளனர். வாடிக்கையாளர்கள் சிறந்த முறையில், தங்கு தடையின்றி தகவல்களை பரிமாறிக் கொள்ளும் வகையில், 4,100 தகவல் ஒருங்கிணைப்பு கோபுர வசதிகள் உள்ளன. இவ்வாறு சுரேஷ்குமார்தெரிவித்தார்.வோடபோன் நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு மிகு கூடுதல் சேவை அளிக்கும் வகையில், அண்மையில் "வோடபோன் புளூ' என்ற பெயரில் மொபைல் போன் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல் போன் வாயிலாக, பேஸ்புக் வலைத்தளத்தின் மூலம்,வாடிக்கையாளர்கள், தங்கள் நண்பர்களுடன் எந்த நேரத்திலும், எந்த இடத்தில் இருந்தாலும், எளிதாக தொடர்பு கொள்ள முடியும். இதன் வாயிலாக, தகவல் பரிமாற்றம் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளலாம். இந்த மொபைல் போன் சாதனத்தில் உள்ள "ஊ' என்ற பட்டனை அழுத்தி உடனடியாக, "பேஸ்புக்' இணையதளத்திற்கு சென்று விடலாம். எங்கிருந்து வேண்டுமானாலும் "பேஸ்புக்' ஒருங்கிணைப்பு வசதியை பெற முடிகிறது என்பதால், நிறுவனத்தின் இந்த மொபைல் போன் சாதனத்திற்கு, அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், இந்த சாதனத்தில், 2 மெகா பிக்ஸல் கேமரா, தகவல்களை எளிதாக "டைப்' செய்வதற்கான, "கீ பேட்' எப்.எம். ரேடியோ, 3.5 மி.மி. ஜா-க்குடன் மியூசிக் பிளேயர் போன்ற வசதிகளும் உள்ளன. வோடபோன் நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு, "நெட்குரூஸ்' என்ற தொழில்நுட்ப சாதனத்தின் வாயிலாக, இன்டர்நெட் சேவையைப் பெறுவதற்கான வசதியையும் வழங்கி வருகிறது. இதற்காக, எம்.டி.எஸ்., நிறுவனத்துடன் கூட்டு மேற்கொண்டுள்ளது.இவை தவிர, வோடபோன் நிறுவனம், ஒயர் இணைப்பு இல்லாமலும், கூடுதல் சாப்ட்வேர் பொருந்தாமலும் செயல்படக்கூடிய "மை-பை' என்ற "வோடபோன் ஆர்-201' சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இச்சாதனத்தின் வாயிலாக, ஒரே சமயத்தில், 5 பேர் இன்டர்நெட் இணைப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும். "மொபைல் வை-பை' தொழில்நுட்பத்திலான இந்த சாதனத்தை பொருத்திக் கொண்டு, சுலபமாக இணையதள சேவையை பெறமுடியும். இதுமட்டுமின்றி, மேலும், பல மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகள் வாயிலாக வாடிக்கையாளர் எண்ணிக்கையை உயர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|