பதிவு செய்த நாள்
10 அக்2011
02:39

புதிய பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ.) முடிவடைந்த பிறகு, பங்குகளை, பங்குச் சந்தையில் பட்டியலிடும் கால இடைவெளி யைக் குறைப்பது குறித்து,"செபி' அமைப்பு பரிசீலித்து வருகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளாக, பங்குச் சந்தை கட் டுப்பாட்டு அமைப்பான "செபி', மூலதனச் சந்தை தொடர்பான விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வரு கிறது. பங்கு வர்த்தகத்தில், சில்லறை முதலீட்டாளர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்குடன், இத்தகைய செயல் பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 80'களில், மூலதனச் சந்தையில் பங்கு வெளியீடு(ஐ.பி.ஓ.) முடிவடைந்த பின்னர், மூன்று, நான்கு மாதங்கள் கழித்தே பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு வந்தன. இது, டீமேட் எனப்படும் மின்னணு பங்கு பரிவர்த்தனை கணக்கு நடைமுறைக்கு வந்த பிறகு, மூன்று வாரங்கள் என்ற அளவிற்கு குறைந்தது. இந்த இடைவெளி மேலும் குறைக்கப்பட்டு, தற்போது பங்கு வெளியீடு முடிவடைந்ததும், 12 நாட்களுக்குள் பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிடும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அது போன்று, பங்குகள் வேண்டி விண்ணப்பிக்கும் போதே, அதற்கான பணத்தை செலுத்தும் நடைமுறையும் முன்பு இருந்தது. இதனால், பங்குகள் ஒதுக்கீடு செய்யும் காலம் வரையிலான வட்டி வருவாயை சில்லறை முதலீட்டாளர்கள் இழந்து வந்தனர். மேலும், பங்குகள் ஒதுக்கப்படாவிட்டால், செலுத்திய தொகையை திரும்ப அளிப்பதிலும் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.இந்த குறைபாடுகளைப் போக்க, "அஸ்பா' நடைமுறையை "செபி' கொண்டு வந்தது. இதன்படி, சில்லறை முதலீட்டாளர்கள் பங்கு வெளியீட்டிற்காக விண்ணப்பிக்கும் போது செலுத்தும் தொகை, பங்குகளை ஒதுக்கீடு செய்யும் வரை வங்கிக் கணக்கிலேயே முடக்கப்பட்டிருக்கும். அதனால், அத்தொகைக்கு உரிய வட்டி முதலீட்டாளருக்கு கிடைக்கும். மேலும், பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படாத பட்சத் தில், பணம் தானாகவே விடுவிக்கப்பட்டு விடும்.சில்லறை முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகளை,"செபி' மேற்கொண்டது. எனினும், கடந்த சில ஆண்டுகளாக, சர்வதேச நிலவரங்களால் இந்திய மூலதனச் சந்தை மற்றும் பங்குச் சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, பங்கு மற்றும் பரஸ்பர நிதி துறைகளில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள, "செபி' முடிவு செய்துள்ளது.இதற்காக அமைக்கப்பட்ட நிலைக்குழுவின் கூட்டம், ஓரிரு வாரங்களில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், பங்கு வெளியீட்டிற்கும், பங்குகள் பட்டியலிடுவதற்கும் உள்ள இடைவெளியை 12 நாட்களில் இருந்து மேலும் குறைப்பது, பங்கு விண்ணப்பங்களை மேலும் எளிமைப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்குழுவின் பரிந்துரையின்படி,"செபி' அமைப்பு, ஐ.பி.ஓ. தொடர்பான சீர்திருத்த நடவடிக்கைகளை அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் பரஸ்பர நிதித் துறையிலும், சில்லறை முதலீட்டாளர்களின் பங்களிப்பை அதிகரிக்க, பல்வேறு புதிய திட்டங்களை, "செபி' செயல்படுத்தும் என்று தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|