பதிவு செய்த நாள்
10 அக்2011
02:41

சென்னை:இந்துஜா குழுமத்தை சேர்ந்த, அசோக் லேலண்டுநிறுவனம்,சென்ற செப்டம்பர் மாதத்தில்,1,120 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.இது, கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட,32சதவீதம் (850 வாகனங்கள்) அதிகமாகும். அதே சமயம்,இதே மாதங்களில்,இந்நிறுவனத்தின் உள்நாட்டு வாகன விற்பனை,22 சதவீதம் குறைந்து,9,512 என்ற எண்ணிக்கையிலிருந்து,7,456 ஆக சரிவடைந்துள்ளது.வாகன உற்பத்தி,15 சதவீதம் குறைந்து, 8,761லிருந்து,7,451 ஆக குறைந்துள்ளது. ஒட்டுமொத்த வாகன விற்பனை, 17 சதவீதம் சரிவடைந்து, 10 ஆயிரத்து, 362லிருந்து, 8,576 ஆக குறைந்துள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன விற்பனை, 7 சதவீதம் குறைந்து, 45 ஆயிரத்து, 989லிருந்து, 42 ஆயிரத்து, 905ஆக சரிவடைந்துள்ளது.இதே காலத்தில் வாகன ஏற்றுமதி, 35 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4,290 லிருந்து, 5,769 ஆக அதிகரித்துள்ளது.இருப்பினும் வாகன உற்பத்தி, 9 சதவீதம் குறைந்து, 47 ஆயிரத்து, 661 என்ற எண்ணிக்கையில் இருந்து, 43 ஆயிரத்து 406 ஆக குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|