பதிவு செய்த நாள்
10 அக்2011
10:43

புதுடில்லி:ஏர்இந்தியா நிறுவனத்திற்கு அமெரிக்க வங்கி 1.3 பில்லியன் டாலர் கடன் அளிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வர்த்தக ரீதியான விமான போக்குவரத்தினை இந்தியா மேம்படுத்த உள்ளதாக அடுத்த நடக்கவுள்ள மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவுள்ளது.. இது தொடர்பாக , அமெரிக்காவின் எக்ஸிம் எனப்படும் ஏற்றுமதி, இறக்குமதி வங்கியின் வாரியஇயக்குனரகம், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவின் முன்னணி விமான போக்குவரத்து நிறுவனமான ஏர்இந்தியா, போயிங் ரக விமானங்களை வர்த்தக ரீதியாக பயன்படுத்துகிறது. ஏற்கனவே இந்நிறுவனத்திற்கு 1.2 பில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. அடுத்த இரண்டு மாதங்களில் ஏர்இந்தியா 787 பேர் அமரக்கூடிய 27 போயிங் விமானங்களை வாங்கும் திட்டம் நிலுவையில் உள்ளது. இவை விரைவில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் இந்நிறுவனத்திற்கு மேலும் 1.3 பில்லியன் டாலர் கடன்வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|