பதிவு செய்த நாள்
10 அக்2011
12:18

மும்பை: ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சன் டி.வி., கலாநிதி , தயாநிதி ஆகியோர் மீது சி.பி.ஐ., முதல் தகவல் அறிக்கையை ( எப்.ஐ.ஆர்., ) பதிவு செய்தது. இதனையடுத்து சென்னை, டில்லி, ஐதராபாத் பகுதியில் உள்ள இவர்களது வீடுகள், சன் டி.வி., அலுவலகங்களில் இன்று ( திங்கட்கிழமை) காலை சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து சன்குழுமத்தின் பங்குகள் சரிவை சந்தித்து வருகிறது. இன்று வர்த்தகம் துவஙகிய நேரத்தின் துவக்கத்திலேயே சன் டி.வி. பங்குகள் 7 சதவீதம் சரிவை சந்தித்தன. தொடர்ந்து 16 சதவீதம் வரை படுபாதாளத்தில் சென்றது.. இன்று காலை 11.13 மணியளவில் சென்செக்ஸ் 2451.50-லிருந்து, 235.05 ஆக குறையத்துவங்கியது. சரிவு ஏற்பட்டு வருவதைத்தொடர்ந்து முதலீட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|