ஏற்றத்துடன் முடிந்தது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 324 புள்ளிகள் சென்றதுஏற்றத்துடன் முடிந்தது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 324 புள்ளிகள் சென்றது ... பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்:  ரூ.16,800 கோடி நிதி திரட்ட திட்டம் பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்: ரூ.16,800 கோடி நிதி திரட்ட திட்டம் ...
செப்டம்பர் மாதத்தில் கார் விற்பனை 1.8 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2011
00:19

புதுடில்லி:சென்ற செப்டம்பர் மாதத்தில், உள்நாட்டில் கார்கள் விற்பனை 1.8 சதவீதம் சரிவடைந்து, 1 லட்சத்து 65 ஆயிரத்து 925 ஆக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 1 லட்சத்து 68 ஆயிரத்து 959 கார்கள் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது என, இந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (சியாம்) தெரிவித்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வு மற்றும் வாகன கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிப்புபோன்றவற்றால் கார்கள் வாங்குவது குறைந்துபோயுள்ளது. இருப்பினும் கார்விற்பனையை உயர்த்தும் வகையில், இத்துறை நிறுவனங்கள் பல்வேறு சலுகை திட்டங்களை அறிவித்து வருகின்றன.சென்ற செப்டம்பர் மாதத்தில், மோட்டார் சைக்கிள்கள் விற்பனை 19.92 சதவீதம் வளர்ச்சி கண்டு, 9 லட்சத்து 33 ஆயிரத்து 465 ஆக உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 7 லட்சத்து 78 ஆயிரத்து 351 ஆக இருந்தது. இதே காலத்தில், ஒட்டு மொத்த இருசக்கர வாகனங்கள் விற்பனை, 24.27 சதவீதம் அதிகரித்து, 9 லட்சத்து 92 ஆயிரத்து 383 என்ற எண்ணிக்கையிலிருந்து, 12 லட்சத்து 33 ஆயிரத்து 283 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.மேலும், வர்த்தக வாகனங்கள் விற்பனை 18.04 சதவீதம் உயர்ந்து, 70 ஆயிரத்து 634 வாகனங்களாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 59 ஆயிரத்து 836 ஆக காணப்பட்டது.ஒட்டு மொத்த அளவில், அனைத்து வகையான வாகனங்களின் விற்பனை 19.39 சதவீதம் வளர்ச்சி கண்டு, 13 லட்சத்து 16 ஆயிரத்து 118 என்ற எண்ணிக்கையிலிருந்து, 15 லட்சத்து 71 ஆயிரத்து 342 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)