பதிவு செய்த நாள்
14 அக்2011
13:01

புதுடில்லி : செப்டம்பர் மாதத்தில் நாட்டின் உணவு பொருட்கள், எரிபொருட்கள், உற்பத்தி மூல பொருட்கள் உள்ளிட்டவைகளின் பணவீக்கம் 9.72 சதவீதமாக குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கி தனது பணக் கொள்ளையை அதிகரித்துள்ளதால் பணவீக்கம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் மொத்த பணவீக்கம் 9.78 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2010ல் நாட்டின் மொத்த பணவீக்கம் 8.98 சதவீதமாக இருந்துள்ளது. மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள மொத்த பணவீக்க விகிதத்தில் ஆண்டு பணக்கீட்டின்படி உணவு பொருட்களின் விலை 9.23 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக வெங்காயத்தின் விலை 23.58 சதவீதமும், பழங்களின் விலை 15.98 சதவீதமும், உருளைக்கிழங்கின் விலை 14.64 சதவீதமும் அதிகரித்துள்ளது. காய்கறிகளின் விலை 14.04 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|