பதிவு செய்த நாள்
14 அக்2011
14:56

சிட்னி : ஆப்பிள் நிறுவன தலைவர் ஸ்டீவ் ஜாப்சின் மரணத்திற்கு பிறகு புதிய ஐபோன் மாடலை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அமெரிக்க தொழில்நுட்பத்தில் உருவான இந்த ஐபோன் ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய ஐபோனை வாங்குவதற்கு சிட்னியில் உள்ள தொழில்நுட்ப பொருட்கள் விற்பனை கடைகளின் வெளியே மிக நீண்ட வரிசையில் ஐபோன் பிரியர்கள் காத்துக்கிடக்கின்றன. தியேட்டர்களில் பார்ப்பதை போன்ற உணர்வை ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றில் பெறுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். புதிய ஐபோன் 4 எஸ் மாடலை, 3 நாட்களுக்கு அதிகமாக வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர். ஆஸ்திரேலிய முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஐபோன் 4 எஸ் மாடலுக்கு கடந்த வாரமே முன்பதிவு செய்து விட்டன. ஆப்பிள் தயாரிப்புக்களில் 24 மணிநேரத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையாகி ஐபோன் 4 எஸ் மாடல் விற்பனையில் ஏற்கனவே புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|