பதிவு செய்த நாள்
14 அக்2011
16:55

மும்பை : ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகளின் ஏற்றத்தால் கடந்த 3 வாரங்களுக்கு பிறகு சென்செக்ஸ் மீண்டும் 17,000 புள்ளிகளுக்கு மேல் மீண்டுள்ளது. இன்றைய வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 198.77 புள்ளிகள் உயர்ந்து 17,082.69 புள்ளிகளாகவும், நிஃப்டி 54.45 புள்ளிகள் அதிகரித்து 5,132.30 புள்ளிகளாகவும் இருந்தது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீசின் காலாண்டு வருமானம் 2.36 சதவீதமும், இன்ஃபோசிஸ் நிறுவன வருமானம் 1.83 சதவீதமும் உயர்ந்தும் பங்குச் சந்தையின் இன்றைய ஏற்றத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி மத்திய அரசு இன்று வெளியிட்ட நாட்டின் செப்டம்பர் மாத மொத்த பணவீக்கம் 9.72 சதவீதமாக சரிந்து ரிசர்வ் வங்கியின் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட உயர்ந்து காணப்படுவதும் பங்குச் சந்தையின் ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|