பதிவு செய்த நாள்
16 அக்2011
15:47

புதுடில்லி : டில்லியில் ஒயின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 6 மாதங்களில் டில்லி நகரில் ஒயின் விற்பனை 41 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் 25,064 கேஸ்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டின் இதே கால அளவில் 17,722 கேஸ்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. 12 பாட்டில்கள் கொண்ட கேஸ்களின் வளர்ச்சி 41.43 சதவீதம் அதிகரித்துள்ளது. டில்லியில் தற்போது இறக்குமதி செய்யப்படும் ஒயின் வகைகளையும் சேர்த்து மொத்தம் 64 வகையான ஒயின்கள் விற்பனையாகின்றன. டில்லியில் 450 ரெஸ்டாரண்ட்கள், 356 அரசு மதுபானக் கடைகள், 89 தனியார் மதுபானக் கடைகள் ஆகியவற்றில் ஒயின் விற்பனையாகி வருகின்றன. உலக அளவில் திராட்சை அதிகம் உற்பத்தி செய்யும் 9வது நாடு இந்தியா ஆகும். தற்போது ஒயின் விற்பனை சந்தையிலும் இந்தியா வளர்ந்து வருகிறது. செப்டம்பர் மாதத்தில் 5274 ஒயின் கேஸ்களும், அக்டோபர் 13 வரையிலான மாதத்தில் 2396 கேஸ்களும் விற்பனையாகி உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|