பதிவு செய்த நாள்
16 அக்2011
16:38

சிங்கப்பூர் : உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையற்ற தன்மை காரணமாக தங்கம் விலை, 2012ம் ஆண்டில் புதிய உச்சத்தை எட்டும் என பல்பொரும் நிதியக மேலாளர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை, பிறகு அதே நிலையிலேயே சில நாட்கள் நீடித்தது. இதனால் பரிவர்த்தனை வர்த்தகர்கள், மத்திய வங்கிகள் உள்ளிட்ட நீண்ட கால விற்பனையாளர்களின் பங்குகளில் நிலையற்ற தன்மை காணப்பட்டது. இந்த ஆண்டு சுமார் 17 சதவீதம் வரை தங்கம் விலை அதிகரித்துள்ளது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு செப்டம்பர் மாதத்தின் முன் பகுதியில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 300 டாலர்கள் வரை அதிகரித்து 1920.20 டாலர்களாக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் பொருளாதார நெருக்கடியும் தங்கம் விலை தொடர்ந்து வருவதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|