2012ல் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 8.7% ஆக இருக்கும்2012ல் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 8.7% ஆக இருக்கும் ... இந்தியாவில் ஆண்டுக்கு 35 கோடி டன் கரும்பு உற்பத்தி இந்தியாவில் ஆண்டுக்கு 35 கோடி டன் கரும்பு உற்பத்தி ...
கேரளாவில் குவியும் தமிழர்களின் அடமான நகைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2011
00:01

தமிழக மக்கள், தங்களை அறியாமலேயே தங்கள் நகைகளை, கேரளாவிற்கு தாரை வார்த்து வருகின்றனர். ஆம்! அவர்களால் அடகு வைக்கப்பட்டு, மீட்க முடியாமல் மூழ்கிப் போகும்... அல்லது மூழ்கடிக்கப் படும் நகைகள், கேரளாவின் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் குவிந்து வருகின்றன. அடகு கடைகள்: தங்க நகைகளுக்கு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள், அடகு கடைகள் என, பலவற்றில் கடன் பெறும்வசதி உள்ளது. ஆனால்,இங்கு (அடகு கடைகள் நீங்கலாக) தங்க நகைகளின் அடமானத்திற்கு, உடனடியாக பணம் கிடைக்குமா என்றால் அது தான் இல்லை.உறுப்பினர் சேர்ப்பு நடைமுறைகள் உள்ளிட்டவற்றையெல்லாம் பூர்த்தி செய்த பின்னரே, தங்க நகைகளை அடமானம் வைக்க முடியும். கூட்டுறவு வங்கிகளில்,இந்த நடைமுறைகளை மேற்கொள்வதற்கு,சில மணி நேரத்தை கண்டிப்பாக ஒதுக்கியாக வேண்டும்.அந்த அளவிற்கு, அங்கு சுறு சுறுப் பாக பணி நடைபெறும்!அதனால், அவசரத் தேவைக்கான பணத்தை உடனடியாக பெறுவதற்கு,பெரும்பாலோர், வட நாட்டினர் நடத்தி வரும் அடகு கடைகளை நாடுகின்றனர். வட்டி விகிதம்: கூட்டுறவு வங்கிகளை விட, இந்த அடகுகடைகளில் வட்டி விகிதம் அதிகம்.குறைந்தபட்சமாக, இவை 24 சதவீத வட்டியில் கடன் வழங்குகின்றன. இதற்கான நடைமுறைகள், உடனடியாக முடிந்து விடுவதால்,வட்டி அதிகம் என்றாலும், அடகு கடைகளையே மக்கள் தங்கள் அவசரத் தேவைக்கான தீர்வாக கருதி வருகின்றனர். இந்நிலையில், தங்க அடமானக் கடன்சந்தையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தீவிரமாக களமிறங்கின. கவர்ச்சிகரமான வட்டி,சவரனுக்கு மிக அதிக தொகை என, அதிரடி விளம்பரங்களை வெளியிட்டு மக்களை கவரத் தொடங்கின. கேரள நிறுவனங்கள்: இதில், கேரளாவை சேர்ந்த இரு நிறுவனங்கள் கொடி கட்டிப் பறக்கின்றன. இவற்றின் வர்த்தகம், குறுகிய காலத்தில், அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில், கிளைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனங்கள், வாடிக்கை யாளர்களின் கடன் தேவையை, பத்து நிமிடங்களில் பூர்த்தி செய்து விடு கின்றன.இந்நிறுவனங்களிடம், தங்க நகைக் கடன் பெறுவதற்கு அடையாள அட்டை மற்றும் வசிப்பிடசான்றின் நகல் இருந்தால் போதும், பணத்தை பெற்று விடலாம். மேலும், இந்நிறுவனங்கள், வேறு யாரும் தராத அளவிற்கு, அடமான நகை களுக்கு கடன் வழங்குகின்றன. அதாவது, சாதாரண அடகு கடைகள், அடமானத்திற்காக வைக்கப்படும் ஒரு கிராம் தங்க நகைக்கு அதிகபட்ச மாக, 1,600 ரூபாய் வழங்கினால், இந்நிறுவனங்கள் 2,100 ரூபாய் வரை கடன் வழங்குகின்றன.சந்தையில் ஒருசவரன் தங்க நகையின் விலை, 21 ஆயிரம் ரூபாயாக இருக்கும் பட்சத்தில், இந்நிறுவனங்கள் சிறப்புத் திட்டங்களின் கீழ் 17 - 18 ஆயிரம் ரூபாய் வரை கடன் தருகின்றன. அபராத தொகை: தங்க நகை கடன்களுக்கு 12சதவீதம் முதல் 24சதவீதம் வரை பல்வேறு வட்டிவிகிதங்கள் வசூலிக் கப்படுகின்றன.மாத வட்டியை ஒழுங்காக கட்டாவிட்டால், 2சதவீத அபராத தொகை, வட்டிவிகிதம் உயர்த்தப்படும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளும்உண்டு.நகையை அட மானம் வைத்து கடன் பெற்றவர்,ஒழுங்காகவட்டியை செலுத்தினால், எந்த பிரச்னையும் இருக்காது. ஆனால், 50சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஒழுங் காக வட்டிசெலுத்துவ தில்லை. 12சதவீத வட்டியில் நகையை அடமானம் வைக்கும் ஒருவர், ஓராண்டு வட்டி செலுத்தாவிட்டால், வட்டி விகிதம் உயர்ந்து விடும். அதுவும்,நகையை அடமானம் வைத்த தேதியில் இருந்து, இது கணக்கிடப் படும்.இத்துடன்2சதவீத அபராதமும் உண்டு.நகைகளை மீட்கச் செல்லும் போது, இந்த விவரங்கள் தெரியவந்து, போதுமான பணம் இல்லாமல், நகையை மீட்கும் ஐடியாவையே கைவிட்டுச் செல்வோரும் உண்டு."வட்டி செலுத்த தவறுவோருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் நினை வூட்டு தகவல் அனுப்புகிறோம். அதை அலட்சியப்படுத்துவோருக்கு தான் இத்தகைய நிலை ஏற்படுகிறது' என்கிறார் கேரள அடகு நிறுவனமொன்றில் பணியாற்றும் பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர். ஏலம்:வாங்கிய கடனுக்கு வட்டி கட்டத் தவறினால், அது குட்டிமேல்குட்டி போடுகிறது. நகையின் அடமானத் தொகைக் கும்,சந்தை விலைக்கும் இடையிலான வித்தியாசம் குறையும்போது, நகையை மீட்கும் முடிவை கடனாளி கைவிடு கிறார்.பிறகென்ன, அடமான நகைகள், நிறுவனங்கள் வசமாகிவிடும். இதே பார்முலாவை கேரள நிறுவனங்கள் பின்பற்றி, தமிழகத்தின் அடகு நகைகளை மறைமுகமாக சொந்தமாக்கி வரு கின்றன.வட்டி கட்டத் தவறுவோருக்கு நிறுவனங்கள் ஓராண்டு தான் அவகாசம் அளிக்கின்றன. அடுத்து அனுப்பும் இரண்டு நினைவூட்டு கடிதங்களுக்கும் பதில் இல்லை யென்றால்,சரியாக அடகு வைத்த 15வது மாதத்தில், நகைகள் ஏலம் விடப்படுகின்றன. இதிலும் பல குளறுபடிகள் நடைபெறுவதாகவும்,நிறுவனங்கள்,தங்களுக்கு வேண்டிய ஆட்கள் மூலம்,நகைகளை ஏலத்தில் எடுத்து விடுவதாகவும் கூறப்படுகிறது.இந்த வகையில், தமிழக மக்களின் பல கோடிரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள்,கேரள நிறுவனங்களிடம்போய் விடுகின்றன. இந்த நிலைக்கு, இந்நிறுவனங்களை மட்டும் குறை கூற முடி யாது. அதிக பணத்திற்கு ஆசைப்படுவதால் தான், நகையை பறிகொடுக்க நேர்கிறது. மக்களின் அறியாமை விலகி னால் தான், இந்த விபரீதத்தை தடுக்க முடியும். தங்க நகை அடமானத்திற்கு அதிக தொகை கிடைக்கிறதே என்று ஆசைப் படாமல்,தேவையான தொகையை மட்டும் பெறுவது சிறந்தது. அப்படியில்லையென் றால், அடமானம் வைக்காமல், தங்க நகையை விற்று விடுவதே, புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். பாதுகாப்பு குறைபாடு: தங்க நகை கடன் வழங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கிளைகளில், போதுமான பாதுகாப்பு இல்லை. கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. அண்மையில் திருப்பூரில் ஒரு அடகு நிறுவனத்தின் கிளையில் இருந்து, பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதே இதற்குசான்று. முதலுக்கே மோசம்:கார்ப்பரேட் நிறுவனங்கள், ஒரு கிராம் தங்க நகைக்கு 2,100 ரூபாய் வரை கடன் வழங்குகின்றன. இதற்கும், புதிய தங்க நகைக்கும், ஒரு கிராமிற்கு 400-500 ரூபாய் தான் வித்தியாசம். அதாவது, ஒருசவரனுக்கு 3,200 - 4,000 ரூபாய் தான் வேறுபாடு. ஒருவர் 5சவரன் நகையை அடமானம் வைத்து, 84 ஆயிரம் ரூபாய் பெற்றால், 12சதவீத வட்டியின்படி மாதம் 840 ரூபாய் செலுத்த வேண்டும். மாத வட்டியை செலுத்த தவறினால், இத்தொகை, கூடுதல் வட்டி, அபராதம் என எல்லாம் சேர்ந்து, ஓராண்டில் கிட்டத்தட்ட 20,000 ரூபாயை எட்டி விடும். அடமான நகையை மீட்பதற்கு பதிலாக,சற்று கூடுதல் தொகைக்கு புதிய நகையை வாங்கி விடலாம் என்ற மனநிலைக்கு கடன்தாரர் தள்ளப்படுவார். இல்லையென்றால், நகையை மீட்டு, விற்றால், கொஞ்சமாவது பணம் கிடைக்குமா என்று சிந்திப்பார். - ஏ.கே.விஜய்தேவ் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)