பதிவு செய்த நாள்
17 அக்2011
12:00
டாக்கா: உலகின் குறைந்த விலை கார் என பெயர் பெற்ற டாடா நிறுவனத்தின் நானோ கார் எதிர்பார்த்த அளவு விற்பனையாகததால், நானோ காரை வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகம் செய்ய முயற்சித்து வருகிறது. அதன்படி வங்கதேசத்தில் இந்த காரின விலை ரூ.3.80 லட்சம் என்ற விலையில் நானோ கார் அறிமுகம் செய்யப்பட இருந்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று டாக்காவில் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டது. வங்கதேச நாட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இலங்கை சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நானோ கார் ,வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் போது அந்நாட்டு அரசுகளால் விதிக்கப்படும் இறக்குமதி விலையானது இந்தியாவைவிட 2 முதல் 3 மடங்கு வரை கூடுதல் விலையில் அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.ஆனால், கண்காட்சிக்கு வந்த வாடிக்கையாளர்கள் விலை அதிகமாக இருப்பதாக கூறியதால், வர்த்தக ரீதியில் நானோவின் அறிமுகத்தை அந்நாட்டு மொத்த விற்பனையாளராக நியமிக்கப்பட்டுள்ள நிதோல் மோட்டார்ஸ் நிறுவனம் தள்ளி வைத்துள்ளது. வங்கதேசத்தில் ரூ.3.80 லட்சம் என்ற விலையில் நானோ கார் அறிமுகம் செய்யப்பட இருந்த நிலையில், டிக்கையாளர்கள் முகம் சுளித்ததால், அந்த காரின் அறிமுகம் கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|