பதிவு செய்த நாள்
18 அக்2011
10:03

புதுடில்லி: முன்னணி தகவல் தொழி்ல்நுட்ப நிறுவனமான எச்.சி.எல். தனது முதல் காலாண்டில் ரூ. 496.7 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னேறி வரும் எச்.சி.எல். நிறுவனம் கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி காலைவரையில் முதல் காலாண்டில் ரூ. 497.7 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது 25.4 சதவீத வளர்ச்சியாகும். மேலும் இந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இதன் வருவாய் ரூ. 510.4 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2008-ம் ஆண்டு ஜூலையில் இந்நிறுவனத்தில் வருவாய் 501 மில்லியன் டாலராக இருந்தது. மூன்றே ஆண்டுகளில் இதன் வருவாய் இரண்டு மடங்காக (பில்லியன் டாலர்) அதிகரித்துள்ளதாக இந்நிறுவனத்தின் துணைத்தலைவரும், தலைமை நிர்வாகியுமான வினித்நாயர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|