பதிவு செய்த நாள்
18 அக்2011
10:06

விலை குறைந்த சிறிய கார்களுக்கு தான் இந்தியாவில் மவுசு. அதிலும், எரிபொருள் சிக்கனம் கொண்ட கார் என்றால், மிகுந்த வரவேற்பு உண்டு. இந்த விஷயத்தில் இது நாள் வரை, மாருதி ஆல்டோ காரை அடித்து கொள்ள ஆள் இல்லை. இதன் விலை ரூ.2.32 லட்சத்தில் இருந்து ரூ. 3.17 லட்சம்(எக்ஸ் ÷ஷாரூம், டில்லி) வரை உள்ளது. மாதத்துக்கு 20 ஆயிரம் ஆல்டோ கார்கள் விற்பனையாகின்றன.இந்த சூழ்நிலையில், இந்தியாவின் சிறிய கார்கள் சந்தையில் நுழைய, தென் கொரியாவை சேர்ந்த ஹுண்டாய் கார் நிறுவனம் திட்டமிட்டது. இந்த நிறுவனத்தின் பல்வேறு மாடல் கார்கள் ஏற்கனவே விற்பனையில் உள்ளன. இருந்தாலும், சிறிய கார்கள் சந்தையில், இரண்டாமிடத்திலேயே உள்ளது. எனவே, ரூ.900 கோடி செலவில், "இயான்' என்ற புதிய காரை, ஹுண்டாய் வடிவமைத்தது. இந்த காரின் முன்பக்க தோற்றம், ஏற்கனவே உள்ள ஹுண்டாய் கார்களை போலவே உள்ளது. வெளிநாடு களில் விற்பனையில் உள்ள ஐ30 காரை போன்று, ஐயான் காரின் பின்புற தோற்றம் காணப்படுகிறது. ஆல்டோ காரை விட, இயான் காரின் உட்புறம் நிறைய இடம் கொண்டதாக காணப்படுகிறது.இந்த காரை, ஹுண்டாய் நிறுவனம் சில நாட்களுக்கு முன் டில்லியில் அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ.2.69 லட்சத்தில் இருந்து ரூ.3.71 லட்சம்(எக்ஸ் ÷ஷாரூம், டில்லி) வரை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறு வேரியன்ட்களில் கிடைக்கும் இந்த காரில் 814 சிசி திறன் கொண்ட பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. லிட்டருக்கு 21.1 கி.மீ., மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் 12 மாதங்களில் 1.20 லட்சம் இயான் கார்களை உற்பத்தி செய்ய, ஹுண்டாய் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த காரின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி விட்டது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|