பதிவு செய்த நாள்
18 அக்2011
10:55

மஹிந்திராவும், பிரான்ஸ் ரெனால்டு நிறுவனமும் இணைந்து, கடந்த 2005ம் ஆண்டு இந்தியாவில், லோகன் கார் விற்பனையை துவக்கின. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லை. இதையடுத்து, லோகன் கார் திட்டத்தில் இருந்து ரெனால்டு நிறுவனம் வெளியேறியது. மஹிந்திரா நிறுவனம், "வெரிடோ' என பெயரை மாற்றி, கடந்த ஏப்ரல் முதல் விற்பனையை துவக்கியது. மஹிந்திரா நிறுவனத்தின் தீவிர முயற்சி மற்றும் விளம்பர தந்திரம் ஆகியவற்றின் காரணமாக, மாதம் 800 கார்கள் விற்பனை என இருந்தது, மாதம் 1,600 கார்கள் என்ற அளவுக்கு விற்பனை அதிகரித்தது.இந்த சூழ்நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு, "வெரிடோ எக்ஸிகியூடிவ்' என்ற ஸ்பெஷல் எடிசன் காரை, மஹிந்திரா நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு பிரிவுகளிலும் கிடைக்கும் இந்த காரில், 1.5 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுளளது. இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் இந்த காரின் விலை ரூ.5.95 லட்சத்தில் இருந்து ரூ.7.09 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள வெரிடோ கார், ஹுண்டாய் ஆக்ஸன்ட், டாடா இன்டிகோ சிஎஸ், டொயோட்டோ எதியோஸ், மாருதி ஸ்விப்ட் டிசையர் ஆகிய கார்களுக்கு கடும் போட்டியை அளித்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|