பதிவு செய்த நாள்
18 அக்2011
14:57

மும்பை: இன்று காலை வர்த்தக நேர துவங்கியதில் இருந்தே இறங்குமுகத்துடன் காணப்பட்ட இந்திய பங்குச் சந்தைகள் மதியத்திற்கு மேல் மேலும் சரிவுடன் காணப்பட்டது. ஐ.டி., நிறுவனங்களின் இந்த நிதி ஆண்டிற்கான இரண்டாம் காலாண்டின் நிதி அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் நிலை திருப்திகரமாக இல்லாததால் ஐ.டி., நிறுவனப்பங்குகளின் மதிப்பு சரிந்து காணப்பட்டன. இதை தொடர்ந்து பங்குசந்தையில் பெரும்பாலான பங்குகள் விற்கும் போக்கு காணப்பட்டதால், மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 286.87 புள்ளிகள் குறைந்து 16,738.22 புள்ளிகளாக காணப்பட்டது. இதேபோல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 75.50 புள்ளிகள் சரிந்து 5,042.75 புள்ளிகளாக இருந்தது. இந்திய பங்குசந்தைகள் போல, ஆசிய பங்குச் சந்தைகளும் சரிவுடன் காணப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|