பதிவு செய்த நாள்
19 அக்2011
00:18

சென்னை:சென்னை சில்க்ஸ் நிறுவனம், வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு புதிய ரக ஆடைகளை அறிமுகம் செய்துள்ளது.இதுகுறித்து, இந்நிறுவனத்தின் பொதுமேலாளர் சையத் முஸ்தாக் கூறியதாவது:சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கு, தற்போது, தென்னிந்தியாவில், பத்து ஷோரூம்கள் உள்ளன. இதில், கோவையில், மூன்று ஷோரூம்களும், சென்னை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, திருநெல்வேலி மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் தலா ஒரு ஷோரூமும் உள்ளன. நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு, பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்காக, பல்வேறு வகையான புதிய ஆடை ரகங்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு, மால்குடி கிட்டோனிக், ஷேடட் பாபியா, சிங்கா, கனிஸ்கா உள்ளிட்ட பல்வேறு வகை யான புடவைகளும், ஆண்களுக்கு ரிவர்ஸபிள் பேன்ட், சிலிப்பிட் ஸ்டரச்சபிள் பேன்ட் மற்றும் புதிய ரக சட்டைகள் வரவழைக்கப்பட்டுள் ளன.இவைதவிர, 3,000 ரூபாய் முதல் 40 லட்சம் ரூபாய் வரையிலான,எண்ணற்ற பட்டு புட வைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நிறுவனத்தின் சொந்த தறி களில் இவை நெய்யப்படுவதால், வாடிக்கை யாளர்களுக்கு ஒரிஜினல் பட்டுப் புடவைகள் நியாயமான விலையில் அளிக்கப்படுகின்றன. பட்டாடைகள் மற்றும் பட்டுப் புடவைகளில்,"சில்க் மார்க்' முத்திரை பதிக்கப்பட் டுள்ளதால், வாடிக்கையாளர் களுக்கு மிகவும் தரமான, அசல் பட்டாடைகள் கிடைக்கின்றன. இவ்வாறு சையத் முஸ்தாக் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|