பதிவு செய்த நாள்
19 அக்2011
00:20

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய் கிழமையன்று, மிகவும் மோசமாக இருந்தது. காலையில், பங்கு வர்த்தகம் தொடங்கியது முதல், இறுதி வரை பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, மிகவும் சரிவடைந்திருந்தது. ஒரு சில ஐரோப்பிய நாடுகளில், ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு ஐரோப்பிய குடி யரசு நாடுகள், இன்னும் தீர்வு அளிக்காததால், ஐரோப்பாமற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளின்வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. இதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், பொறியியல், உலோகம், மோட் டார் வாகனம், வங்கி, எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலையும் குறைந் திருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 276.80 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 16,748.29 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக 16,824.76 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக16,669.04 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும்,30 நிறுவனங்க ளுள்,25 நிறுவனப் பங்கு களின் விலை சரிவடைந்தும், 5 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,"நிப்டி' 80.75 புள்ளிகள் சரிவடைந்து, 5,037.50 புள்ளிகளில் நிலை பெற்றது.வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,057.50 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,011.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|