பதிவு செய்த நாள்
19 அக்2011
14:23
புதுடில்லி: நேரடி அன்னிய முதலீடு 16.8 பில்லியன் டாலராக உள்ளதாக நிதி அமைச்சர் கூறினார். பொருளாதார நிபுணர்கள் மாநாடு டில்லியி்ல் நடந்தது. இதில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு பேசுகையில், அடுத்தாண்டு (2011-2012-ம் ஆண்டில் பட்ஜெட் திட்டங்களை காட்டிலும் வளர்ச்சி விகிதம் குறைவாக இருக்கும். கடந்த 2008-ம் ஆண்டு உலகளவில் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்ட போதும் , நாட்டின் மொத்த வளர்ச்சி விகிதம் 9.3 சதவீதமாக இருந்தது. 2009-2010-ல் 8 சதவீதமாகவும், 2010-2011 -ல் 8.5 சதவீதமாக இருந்தது. தவிர இந்தாண்டு ஏப்ரல்- ஆகஸ்ட் மாதங்களில் நேரடி அன்னிய முதலீடு இருமடங்காக அதிகரித்து 16.8 பில்லியன் டாலராக உள்ளது. இதனை கடந்தாண்டு ஒப்பிடுகையில் வளர்ச்சி விகிதம் 19.2 சதவீதம் ஆகும் என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|