பதிவு செய்த நாள்
24 அக்2011
00:38

புதுடில்லி:தீபாவளி மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வரும் டிசம்பர் வரையிலான காலாண்டில், நாட்டின் தங் கம் இறக்குமதி 30-40 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சர்வதேச பொருளாதார நெருக்கடியால்,உலக ளா விய பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டு வருகின்றன.இதனால்,பங்குகளில் முதலீடு செய்து வந்தோர்,தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாக, இவ்வகை உலோகங்களின் மீதான முதலீடு அதி கரித்துள்ளது. பயன்பாடு:உலகில், அதிகளவில் தங்கத்தை பயன்படுத்தும் நாடுகளில்,இந்தியா முன்னணியில் உள்ளது.நாட்டின் பாரம் பரிய கலாசாரத்தில், தங்க ஆபரணங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.இதனால் பண்டிகை, திருமணம், விழாக் காலங் களில் தங்கத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.இந்நிலையில், தங்கத்தில் முதலீடு செய்யக்கூடிய"ஈகோல்டு', கோல்டு ஈ.டி.எப் போன்ற புதிய திட்டங்களும், முதலீட்டாளர்களை கவர்ந்து வருகின்றன.இதனால், இவ்வகை திட்டங்களில் முத லீடு பெருகி வருகின்றன. இத்திட்டங்களின் கீழ் தங்கம் வாங்கப்படுவதால், அதற்கான தேவையும் நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. பங்கு முதலீடு: தங்கத்திற்கான தேவை உயர்ந்து வருவதால், அதன் விலையும் ஏறுமுகமாக உள்ளது. இவ்வாண்டு தொட க்கம் முதல் இந்தியாவில், தங்கத்தின் விலை 29 சதவீதம் உயர்ந்துள்ளது.அதே சமயம், பங்கு முதலீட்டில் 15 சதவீத அளவிற்கே வருவாய் கிடைத்துள்ளது.சென்ற 2010ம் ஆண்டில், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நான்காவது காலாண்டில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் 47 சதவீதம் அதிகரித்து, 265 டன்னாக உயர் ந்துள்ளது. சென்ற ஓராண்டில், 950 டன்னிற்கும் அதிகமாக தங்கம் இறக்குமதி செய்யப்பட் டது. நடப்பாண்டில், இது மேலும் அதி கரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில், தங்க கட்டிகள், நாணயங்கள் மற்றும் இதர முதலீடுக ளுக்கான தேவை,முந்தைய ஆண்டை விட அதிகரித்து காணப்பட்டது.இதனால், இவ்வகை யிலான தங்கத்தின் தேவை,83 சதவீ தம் அதிகரித்து 349 டன்னாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில்,தங்க ஆபரணங்களுக்கான பயன்பாடு,36சதவீதம் அதி கரித்து, 685 டன்னாக உயர்ந்துள்ளது. இது தவிர, இதர முதலீடு சார்ந்த தங்கத்தின் தேவை,28 சதவீதத்திலிருந்து 34 சத வீதமாக அதிகரித்துள்ளது. சர்வதேச பொருளாதார நெருக்கடியின் தாக்கம், உள்நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு உள் ளிட்ட பாதக மான அம்சங்களையும் கடந்து, தங்கத்தில் முதலீடு செய்வது உயர்ந்து வருகிறது. வட்டி விகிதம்: இது தவிர, ரிசர்வ் வங்கி,கடந்த 18 மாதங்களில்,வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 12 முறை உயர்த்தி யுள்ளது. இதனால், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டியும்,3 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இப்படிப் பட்ட சூழலில், தங்கத்தில், முதலீடு செய்வது ஆதாயம் அளிப்பதாக, முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். இதனால், தங் கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. டிசம்பருடன் முடிவடையும் காலாண்டில், தங்கத்திற்கான தேவை சென்ற ஆண் டின் இதே காலத்தை விட, 40 சதவீதம் அதிகரிக்கும் என்று மும்பையைச் சேர்ந்த காம் டிரெண்ட்ஸ் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆபரணங்களுக் கான தங்க கட்டிகள் விற்பனையில், இந்திய சந்தை சிறந்து விளங்குகிறது.அத னால், ஆவண வடிவிலான தங்க முதலீட்டின் மீதான வருவாய் குறைந்தாலும், தங்க கட்டிகள் விற்பனை அதை ஈடு செய்யும் வகையில் உள்ளது. இதுகுறித்து,சிங்கப்பூரைச் சேர்ந்த பிலிப் பியூச்சர்ஸ் என்ற நிறுவனத்தின் ஆய் வாளர், ஓங்யிலிங் கூறுகையில்," சர்வதேச சந்தையை பொறுத்தவரை தங்க விற்பனையில், இந்தியா முன்னிலை வகிக்கிறது. தங்க கட்டிகள், நாணயங்கள் உள்ளிட் டவற்றின் விற்பனை சிறப்பாக உள்ளதால், அதன் விலை அவுன்ஸ்க்கு 1,700 டாலர் என்ற அளவிற்கு உள்ளது.உலகள வில்,பங்குச் சந்தைகள் சூடு பிடித்து, அதன் காரணமாக தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்தாலும், ஒரு அவுன்ஸ் தங் கம் 1,500 டாலருக்கும் கீழ் செல்லாது எனலாம்' என்று தெரிவித்தார். நடப்பு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நான்காவது காலாண்டில், தீபா வளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டி கைகள் வருவதால், தங்கத்திற்கான தேவை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தங்கம் இறக்கு மதி, சென்ற ஆண்டின், இதே காலத்தை விட அதிகரிக்கும் என மதிப் பிடப்பட் டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|