பதிவு செய்த நாள்
25 அக்2011
01:36

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று நன்கு இருந்தது. ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் பங்கு வியாபாரம் நன்கு இருந்ததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளிலும், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், ரிசர்வ் வங்கி, இன்று நடைபெறும் அதன் நிதிக் கொள்கை குறித்த கூட்டத்தில், வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தக்கூடும் என்ற அச்சப்பாட்டால், மதியத்திற்கு பிறகு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்ட பல முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் முதலீடு செய்தனர்.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், பொறியியல் துறை நிறுவனப் பங்குகள் தவிர, மோட்டார் வாகனம், வங்கி, எண்ணெய், எரிவாயு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. மு ம்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 153.64 புள்ளிகள் அதிகரித்து, 16,939.28 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,104.88 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,898.60 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 23 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 7 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 48.40 புள்ளிகள் உயர்ந்து, 5,098.35 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,145.65 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,084.75 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|