பதிவு செய்த நாள்
26 அக்2011
02:24

மும்பை:தங்க நகை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம், உலகின் முதல் தங்க ஏ.டி.எம்., இயந் தி ரத்தை மும்பையின் லோயர் பரேல் பகுதியில் நிறுவியுள்ளது.இந்த இயந்திரத்தில் 1,000 ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 36 வகையான தங்க, வைர நகைகளை பெறலாம்.மேலும் தங்கம், வெள்ளி நாணயங்கள், பதக்கங்கள் உள் ளிட்டவற்றையும் பெறலாம். விசா டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது ரொக்கம் செலுத்தி இந்த ஏ.டி.எம்., இயந்திரத் தில் தங்க நகைகளை வாங்கலாம். இந்த இயந்திரத்தின் திரையில், பொருள்களின் பட்டியல், அவற்றின் எடை, தரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பார்வையிட்டு, விரும்பிய தங்க நகைகளை பெறலாம். அனைத்து பொருள்களும், நேர்த்தியான முறையில் பேக்கிங் செய் யப்பட்டு வழங்கப்படுகிறது. அவசரமாக தங்க நகைகளை பரிசளிக்க விரும்புவோருக்கு இந்த இயந்திரம் ஒரு வரப் பிர சாதமாகும். இது போன்று, நாடு முழுவதும் 75 இயந்திரங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித் துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|