பதிவு செய்த நாள்
26 அக்2011
11:55

தமிழகத்தில், டொயோட்டா நிறுவனம், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் கார் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது. இதுதவிர, மேலும் இரண்டு ஜப்பான் நிறுவனங்கள், 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.பீஜோ வரவில்லைஇங்கு, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, பி.எஸ்.ஏ., பீஜோ சிட்ரான் நிறுவனம், ஆண்டுக்கு, மூன்று லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறனில், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில், கார் தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டது. இந்நிறுவனத்திற்கு, நிலம் ஒதுக்குவதில் ஏற்பட்ட காலதாமதத்தால், அதன் தொழிற்சாலையை குஜராத் மாநிலத்திற்கு மாற்றியது.போர்டு நிறுவனத்தின் விரிவாக்கம், பி.எஸ்.ஏ., என இரண்டு முன்னணி கார் நிறுவனங்கள், அடுத்தடுத்து குஜராத் மாநிலத்திற்கு சென்றதை, தடுக்கும் வகையில், உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறிவிட்டது என, தி.மு.க., உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டின. டொயோட்டா வருகிறது. இந்நிலையில், டொயோட்டா நிறுவனம், வல்லம் வடகாலில், 500 ஏக்கரில், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் கார் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் உயரதிகாரிகள் குழுவினர், தொழிற்சாலை அமைய உள்ள இடத்தை பல முறை பார்வையிட்டு, ஆய்வு செய்து, 'ரிசர்வ்' செய்து வைத்துள்ளனர். ஜப்பானில், இன்ஜின் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஒரு நிறுவனமும், உதிரிபாகங்கள் தயாரிக்கும் மற்றொரு நிறுவனமும், தலா, 150 ஏக்கர் நிலங்களில், வல்லம் வடகாலில் தொழிற்சாலை அமைக்க உள்ளன. இவ்விரு நிறுவனங்களின் மொத்த முதலீடு, 3,000 கோடி ரூபாய்.இதன் மூலம், 5,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது. இவ்விரு நிறுவனங்களும், தமிழக அரசுடன் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கையெழுத்திட உள்ளன. 1,800 ஏக்கர்டொயோட்டா நிறுவனத்துடன், நிலம் ஒதுக்குவதில் இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதில், முன்னேற்றம் காணப்படும் சூழலில், இதன் ஒப்பந்தமும் விரைவில் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. இந்த மூன்று திட்டங்கள் உட்பட மற்ற முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வகையில், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த, வல்லம் வடகாலில், 1,800 ஏக்கர் நிலம் தொழிற்சாலைகளுக்காக கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இது, விவசாயத்திற்கு ஏற்றதல்ல என்று கூறப்படுகிறது. இதன் மூலம் பீஜோ நிறுவனத்துடன் நடந்த நிலப் பிரச்னை போன்றவை வருங்காலத்தில் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:டொயோட்டா நிறுவனத்துக்கு, பெங்களூரில் இரண்டு தொழிற்சாலைகள் உள்ளன. அதன் விரிவாக்கத்தை, சென்னையில் துவங்க விருப்பமாக உள்ளது. குஜராத்தில், அதிக சலுகை தரப்படுகின்ற காரணத்தால் தான், பல நிறுவனங்கள் அங்கு செல்கின்றன என்பதெல்லாம் ஏற்கத்தக்கதல்ல.தமிழகத்தில், தொழிற்சாலைக்காக கையகப்படுத்துபவை, விவசாய நிலங்கள் அல்ல. சிலர், ரியல் எஸ்டேட் ஆசையில், நிலங்களை வழங்க மறுத்து கோர்ட்டுக்குச் செல்கின்றனர். அப்படி போடப்படும் வழக்கில், அரசு வழக்கறிஞர்கள் விரைவில் ஆஜராகாமல் காலதாமதம் செய்கின்றனர். இதனால், குறிப்பிட்ட காலத்திற்குள் நிலங்களை கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே தான், பல நிறுவனங்கள் இங்கிருந்து வெளியேறுகின்றன. இனி, அது போன்ற சூழ்நிலை ஏற்படாது.இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில் அதிகரிக்கும்ஜப்பான் நிறுவனங்கள்இந்தியாவில் அதிக முதலீடு செய்யும், ஆறாவது பெரிய நாடாக ஜப்பான் திகழ்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், 550 கோடி டாலர் மதிப்புக்கு, ஜப்பான் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.தமிழகத்தில் மட்டும், 248 ஜப்பான் நிறுவனங்கள் உள்ளன. நாட்டில் உள்ள ஜப்பான் நிறுவனங்களில், 30 சதவீதம் தமிழகத்தில் உள்ளன. இதில், 60 சதவீதம் மோட்டார் வாகனத் துறையில் முதலீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.வீ.அரிகரசுதன்-
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|