பதிவு செய்த நாள்
28 அக்2011
16:17

லாகோஸ்: நார்வே நாட்டின் தொலைபேசி துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் மூன்று நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும்படி அந்நாட்டின் தொலை தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அத்துறையின் செய்திதொடர்பாளர்ரூபென் மயூகா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ள தாவது: நைஜீரியாவில் இந்தியாவை சேர்ந்த பார்தி ஏர் டெல் நிறுவனம், தென் ஆப்ரிக்காவை சேர்ந்த எம்.டி.என்நிறுவனம், மற்றும் உள்நாட்டை சேர்ந்த குளோபாகாம் ஆகிய நிறுவனங்கள் தொலைபேசி சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் மேற்கண்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவை குறைந்த தரத்துடன் இருப்பதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார் வந்ததையடுத்து இனிவரும் காலங்களில் நிறைந்த சேவையை வழங்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனதெரிவித்தார்.கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செல்போன் சேவையை நடத்தி வரும் எம்.டி.என் நிறுவனம் 41.1 மில்லியன்வாடிக்கையாளர்களையும், இரண்டாம் இடத்தில் உள்ள உள்ளூர் செல்போன் நிறுவனம் 25 மில்லியன்வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. மூன்றாம் இடத்தில் உள்ள இந்தியாவின் பார்தி ஏர்டெல்நிறுவனம் குவைத் நிறுவனத்துடன் இணைந்து நைஜீரியாவில் கடந்த ஆண்டு தான் தனது சேவையை துவக்கியது என்பதும் குறைந்த கட்டணத்தில் சேவையை அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|