தரத்தை அதிகரிக்க ஏர்டெல்லுக்கு நைஜீரியா கோரிக்கைதரத்தை அதிகரிக்க ஏர்டெல்லுக்கு நைஜீரியா கோரிக்கை ... உள்நாட்டில் தேவை குறைந்தது பாலிமர் ஏற்றுமதியில் நிறுவனங்கள் ஆர்வம்:-பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து- உள்நாட்டில் தேவை குறைந்தது பாலிமர் ஏற்றுமதியில் நிறுவனங்கள் ... ...
புதிய தேசிய உற்பத்தி கொள்கைசிறிய,நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக சலுகைகள் :- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2011
00:12

மத்திய அரசு உருவாக்கியுள்ள புதிய தேசிய கொள்கையில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப் பட்டுள்ளன. தொழிற்சாலைகளை ஈர்ப்பதில் மாநிலங்களுக்கு உள்ள ஆர்வமும், ஈடுபாட்டையும் பொறுத்து இந்த சலுகைகள் வழங்கப்பட உள்ளன.நாட்டில் மிகப் பெரிய தொழில் மண்டலங்களை ஏற்படுத்தும் நோக்கில், புதிய தேசிய தொழில் உற்பத்தி கொள்கையை, மத்திய அரசு உருவாக்கி உள் ளது. இதற்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.இக் கொள்கைப்படி, உலகத் தரத்திலான அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன், மிகப் பெரிய தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலங்கள் (என்.ஐ.எம்.இசட்) உருவாக்கப்படும். புதிய நிறுவனம்: இவ்வகை மண்டலங்களை உருவாக்குவதற்கு, தலைமை செயல் அலுவலர் தலைமையில் புதிய நிறுவனம் ஒன்று ஏற்படுத்தப்படும். இந்த நிறுவனம், தனியார் பங்களிப்புடன் இந்த மண்டலங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.அடுத்த மாதம், இது குறித்த அரசாணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக, டில்லி-மும்பை தொழிற் பகுதியில் இந்த மண்டலம் உருவாக் கப்படும் முதல் கட்டமாக, 7 மண்டலங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மூன்று மண்டலங்கள் மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் அமைய உள்ளன. "எந்த மாநிலம், இது போன்ற மண்டலங்களை அமைக்க நிலங்களை கையகப்படுத்துகிறதோ, அந்த மண்ட லங்களுக்கு நிதி சலுகைகளும், ஆலோசனைகளும் வழங்கப்படும். மற்றபடி, உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று அந்த மாநில அரசு விரும்பினால், தொழிற்துறைக்கு உள்ள கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தலாம்' என்று மத்திய தொழிற் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை செயலர் ஆர்.பி.சிங் தெரிவித்தார். நிதிச் சலுகை: இந்த மண்டலங்களில் அமைய உள்ள உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களும், மண்டலத்திற்கு வெளியே அமைந்துள்ள உற்பத்தி நிறுவனங்களுக்கும் ஏராளமான நிதிச் சலுகைகள் வழங்கப்படும். இந்த மண் டலத்திற்கு உள்ளிருக்கும் உற்பத்தி நிறுவனங்களுக்கு கூடுதல் சலுகைகள் அளிக்கப்படும். நிதிய மைச்சகத்தின் வழிகாட்டு நெறிகளின்படி, இந்த மண்டலங்களில் அமைய உள்ள, சிறப்பு நோக்கத்தை கொண்ட நிறுவனங்கள் (எஸ்.பி.வி), தொழில்நுட்ப பயற்சி மையங்கள் ஆகியவற்றுக்கான நிதி ஆதார வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். பயிற்சி மையங்கள்: மேலும், இந்த மண்டலங்களில் உள்ள தொழில் நுட்ப பயிற்சி மையங்களில், வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் பிரிவிற்கான செலவினை, முதல் ஐந்தாண்டுகளுக்கு அமைச்சகம் வழங்கும். மண்டலத்திற்கு உள்ளேயும், வெளியேயும் குடியிருப்பு விற்பனை மூலம், உற்பத்தி சார்ந்த சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமையும் பட்சத்தில், அவை புதிய இயந்திரங்கள் வாங்குவதில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு நீண்ட கால மூலதன ஆதாயவரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். காப்பீட்டு வசதி: பசுமை தொழில்நுட்பத்தில் உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும்.தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளன. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டால், வேலையிழப்பால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, அவர்களுக்கு காப்பீட்டு வசதி ஏற்படுத்தி தரப்படும். பணிபுரிந்த காலத்தின் அடிப் படையில், ஆண்டுக்கு, சராசரியாக 20 நாள் ஊதியம் என்ற அளவில் இத் தொகை இருக்கும். மேலும், தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் பங்களிப்புடன் கூடிய, நிதியம் ஒன்றும் ஏற்படுத்தப்படும். இந்த மண்டலங்கள், சீனாவில் உள்ளது போன்று, தொழில் நகரங்கள் மற்றும் இதர அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் சர்வதேச தொழில் உற்பத்தி மையம் போன்று விளங்கும். இக் கொள்கைப்படி, பெரிய தொழில் மண்டலங்கள் உருவாகும்பட்சத்தில் வரும் 2025ம் ஆண்டிற்குள் 22 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)