பதிவு செய்த நாள்
29 அக்2011
10:05

புதுடில்லி : லண்டனை தலைமையிடமாகக் கொண்டு, சர்வதேச அளவில், பீஸா வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள பீஸாஎக்ஸ்பிரஸ் நிறுவனம், கோர்மெட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து இந்தியாவில் ரெஸ்டாரெண்டடை அமைக்கிறது. கோர்மெட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனம், பார்தி குழும நிறுவனத்தின் ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, பத்திரிகையாளர்களை சந்தித்த கோர்மெட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவன இயக்குனர் ரமீத் பார்தி மிட்டல் கூறியதாவது, 50 :50 பங்கு அடிப்படையில், தங்கள் நிறுவனம் கோண்டோலோ குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் பீஸா எக்ஸ்பிரஸ் ரெஸ்டாரெண்டை துவக்க உள்ளது. அடுத்த ஆண்டின் துவக்கத்தில், நாட்டின் முதல் பீஸா எக்ஸ்பிரஸ் ரெஸ்டாரெண்ட் இயங்கும் என்று எதிர்பார்க்கப்பதாகவும் அவர் தெரிவித்தார். பார்தி குழு நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் பீஸாஎக்ஸ்பிரஸ் ரெஸ்டாரெண்ட் துவங்க உள்ளது மிக்க மகிழ்ச்சியளிப்பதாக கோண்டோலா குழும உயர் அதிகாரி ஹார்வி ஸ்மி்த் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது
மேலும் பொது செய்திகள்




|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|