பதிவு செய்த நாள்
30 அக்2011
16:05
புதுடில்லி : யுனைடட் பிரிவாரிஸ் நிறுவனத்தின் ஒயின் விற்பனை கடந்த 6 மாதங்களில் 72 முதல் 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளதை அடுத்து அடுத்த 3 முதல் 4 மாதங்களில் புதிய ரக ஒயினை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. நாட்டின் ஒயின் வர்த்தகம் ஆண்டுக்கு சராசரியாக 40 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது. இதில் யுனைடட் பிரிவாரிஸ் நிறுவன ஒயின் மட்டும் 72-80 சதவீதம் வரை விற்பனையாகி வருகிறது. இதனால் வரவிருக்கும் குளிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த புதிய வகை ஒயினை அறிமுகம் செய்ய இந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதுமட்டுமின்றி பிரென்சு ஒயினின் போவேட் லாடுபை பிராண்டையும் இந்நிறுவனம் இறக்குமதி செய்து வருகிறது. இந்திய ஒயின் சந்தையில் ஆண்டுக்கு சராசரியாக 15 லட்சம் முதல் 18 லட்சம் கேஸ்கள் வரை விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|