பதிவு செய்த நாள்
31 அக்2011
00:16

ஈரோடு:வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மலைப்பகுதியில் ஏற்படும் மண் அரிப்பை தடுக்க உதவும் கயிறு உற்பத்தி, ஈரோட்டில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பலத்த மழை பொழியும்போது மலைப்பாங்கான பகுதியில் மண் அரிப்பு ஏற்படும். வடகிழக்கு பருவமழையால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில், மலைப்பாங்கான பகுதிகளில் மண் சரிவு ஏற்படுவது வாடிக்கை. குறிப்பாக, தமிழகத்தில் ஊட்டி, குன்னூர், கொடைக்கானல் ஆகிய இடங்களில், அதிகளவில் மண் அரிப்பு ஏற்படும்.மண் அரிப்பை தடுக்க, மூங்கில் அல்லது சவுக்கு கம்புகளால் சாரம் அமைத்து, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வர். சாரம் கட்ட தேங்காய் நார் கயிறுகளே அதிகம் பயன்படுத்துவர். மழைக்காலம் துவங்கியுள்ளதால், கயிறு உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. ஈரோடு, ரங்கம்பாளையம், அறச்சலூர், வெள்ளோடு, கவுந்தப்பாடி, வீரப்பன்சத்திரம் பகுதியில் சிறியதும், பெரியதுமாக கயிறு உற்பத்தி ஆலைகள் பல உள்ளன. இவற்றில், கயிறு உற்பத்தி அதிகரித்துள்ளது.ஈரோடு ரங்கம்பாளையம் கயிறு உற்பத்தியாளர் விவேகானந்தன் கூறியதாவது:தேங்காய் மட்டையில் இருந்து உரிக்கப்படும் நார்கள் வெள்ளை, பழுப்பு என இரு வகையாக பிரிக்கப்படுகின்றன. அறச்சலூர் பகுதியில் தேங்காய் உற்பத்தி ஆலைகள் அதிகம் உள்ளன. இப்பகுதியில் இருந்து, 35 கிலோ எடையுள்ள தேங்காய் நார் பேல்களை, 630 ரூபாய்க்கு வாங்கி வருகிறோம்."ஹோக்கிலிங்' என்ற இயந்திரம் மூலம், தூசி அகற்றப்பட்டு, நார் தயாராகிறது. அதன்பின், "ஸ்பின்னிங்' இயந்திரம் மூலம் கயிறாக திரிக்கப்படுகிறது. இந்த ஸ்பின்னிங் இயந்திரம் பழையவை, 60 ஆயிரம் ரூபாய்க்கும், புதியவை, 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. இயந்திரத்தில், 35 கிலோ நாரை கொடுத்து நெய்யும் போது, 30 கிலோ கயிறு கிடைக்கிறது. ஒரு கிலோ கயிறு, 27 ரூபாய்க்கும், 15 கிலோ கொண்ட பேல், 405 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தற்போது மழைக்காலம் என்பதால், மலைப்பாங்கான பகுதியில் மண் அரிப்பு ஏற்படும். இந்த சமயத்தில் கயிற்றின் தேவை அதிகமிருக்கும். ஆந்திரா, பீகார், ஒடிசõ போன்றவை எப்போதும் வெள்ளத்தால் பாதிக்கப்படுபவை என்பதால், இம்மாநிலங்களுக்கு அதிகளவில் கயிறு அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழகத்தில் அதிகப்படியாக ஊட்டி, குன்னூர், கொடைக்கானல் பகுதிக்கு கயிறு அதிகளவில் அனுப்பப்படுகிறது. கயிறு உற்பத்தியில் மீதமாகும் கழிவு நாரைக் கொண்டு, கால் மிதியடி தயாராகிறது. இவ்வாறு விவேகானந்தன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|