பாட்டா இந்தியா நிகரலாபம் ரூ.46.81% அதிகரிப்புபாட்டா இந்தியா நிகரலாபம் ரூ.46.81% அதிகரிப்பு ... சென்னையில் வங்கிகளின்  மாநாடு சென்னையில் வங்கிகளின் மாநாடு ...
வடகிழக்கு பருவ மழையால் : மிளகு சாகுபடியில் பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2011
00:06

கொச்சி: மிளகு அதிகம் விளையும் பகுதிகளில், வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், மிளகு சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டில் மிளகு வரத்து குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாண்டு சற்று தாமதாக தொடங்கிய வடகிழக்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்துள்ளது. கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், மிளகு சாகுபடி மேற்கொள்ள இயலாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். இதனால், சந்தையில் மிளகு வரத்து குறைந்து, விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இருந்த போதிலும், சென்ற வாரம் முன்பேர சந்தையில், இம்மாதத்திற்கான ஒப்பந்தத்தில், ஒரு குவிண்டால் மிளகு விலை 1,695 ரூபாய் குறைந்து, 33 ஆயிரத்து 640 ரூபாய் என்ற அளவில் இருந்தது. அது போன்று, தின வர்த்தகத்தில், ஒரு குவிண்டால் மிளகு 1,300 ரூபாய் குறைந்து, 32 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விலை போனது.உள்நாட்டில் மிளகு வரத்து தற்போது குறைந்துள்ள நிலையில், நாட்டின் மிளகு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாத காலத்தில், அமெரிக்காவிற்கு 3,462 டன் மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, அமெரிக்காவின் மொத்த மிளகு இறக்குமதியில் 44 சதவீதமாகும். இந்தியாவை அடுத்து, வியட்னாம் நாடு, அமெரிக்காவிற்கு 2,236 டன் (29 சதவீதம்), மிளகை ஏற்றுமதி செய்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், அமெரிக்காவின் மிளகு இறக்குமதி, 46ஆயிரத்து 799 டன் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது, சென்றாண்டு ஏற்றுமதி செய்யப்பட்டதை விட, 322 டன் அதிகம். அதே சமயம், அமெரிக்கா, வெள்ளை மிளகை விட, கருப்பு மிளகை அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது.அமெரிக்காவிற்கு கருப்பு மிளகு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தோனேஷியா முதலிடத்தில் உள்ளது. இந்நாடு, சென்றாண்டு 15ஆயிரத்து 555 டன் கருப்பு மிளகை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. அடுத்த இடத்தில் வியட்னாம் (8,619 டன்), பிரேசில் (6,985 டன்), இந்தியா (3,523 டன்) ஆகியவை உள்ளன.வெள்ளை மிளகு ஏற்றுமதியில் இந்தோனேஷியா மற்றும் வியட்னாம் நாடுகள் முன்னணியில் உள்ளன. அமெரிக்காவின் மொத்த வெள்ளை மிளகு இறக்குமதியில் இந்த இரு நாடுகளின் பங்களிப்பு, 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)