பதிவு செய்த நாள்
01 நவ2011
00:10

மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் தொடக்க தினமான நேற்று, சற்று மந்தமாக இருந்தது. நமக்கு முன் வர்த்தகம் தொடங்கிய, இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், பங்கு வியாபாரம் சுணக்கமாக இருந்ததையடுத்தும், ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் குறிப்பிடும்படியாக இல்லாததாலும், இந்திய பங்குச் சந்தைகளிலும், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின.நடப்பு வாரத்தில், குறிப்பாக, நேற்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 18,000 புள்ளிகளைத் தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உலகப் பங்குச் சந்தைகளின் சாதகமற்ற போக்கு மற்றும் லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின. குறிப்பாக, எண்ணெய் சுத்திகரிப்பு, உலோகம், பொறியியல், மோட்டார் வாகனம் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 99.79 புள்ளிகள் சரிவடைந்து, 17,705.01 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,813.11 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,668.27 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 22 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 8 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 34.10 புள்ளிகள் குறைந்து, 5,326.60 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,360.25 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,314.60 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|