பதிவு செய்த நாள்
01 நவ2011
11:18

புளூம்பெர்க் : தாய்லாந்தில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளதால், நாடே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதன்காரணமாக, அங்கு அரிசி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு, மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் பாதிப்பு, தற்போது சர்வதேச சந்தையிலும் எதிரொலிக்க துவங்கியுள்ளது. சிகாகோ வர்த்தக மையத்தில், அரிசியின் விலை 20 டாலர் அல்லது 100 பவுண்டுகள் அதிகரி்த்துள்ளது. இது, சதவீத அடிப்படையில், 18 சதவீதம் ஆகும். 2008ம் ஆண்டு, செப்டம்பர் 26ம் தேதியில் இதேநிலை நீடித்தது என்றும், 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரிசியின் விலை அதிகரித்துள்ளது. தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி, 20 சதவீத வீளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம், நாட்டின் 50 சதவீத அரிசிஉற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தாலும் அரிசி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள், சர்வதேச அளவில் அரிசி உற்பத்தி செய்யும் முன்னணி நாடுகள் ஆகும். இயற்கை சீற்றத்தின் காரணமாக, இவ்விரு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச சந்தையில் அரிசியின் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|