பதிவு செய்த நாள்
01 நவ2011
12:54

நியூயார்க் : தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் காரணமாக, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் கார் மற்றும் டிரக் தயாரிப்பை பாதியாகக் குறைக்க ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹோண்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாகன பாகங்கள் உற்பத்தி செய்யும் யூனிட் தாய்லாந்தில் செயல்பட்டு வருகிறது. தாய்லாந்தில் பெய்த தொடர்மழையின் காரணமாக, அந்த யூனிட்டில் உற்பத்தி தடைபட்டுள்ளது. தற்போதுள்ள நிலையில், நவம்பர் 10ம் தேதி வரை உற்பத்தி செய்யப்பட உள்ள வாகனங்களுக்கான பகுதிப்பொருட்களே தங்கள் வசம் உள்ளதாகவும், நவம்பர் 11ம் தேதிக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் வாகன உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட உள்ளதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தபடுவதாக திட்டமிடப்பட்டிருந்த சிஆர்-வி கிராஸ்ஓவர் வாகனம் அறிமுகப்படுத்தப்படுவது தள்ளிப்போகலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில், ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி மற்றும் நிலநடுக்கததால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஹோண்டா நிறுவனம், தற்போது தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|