சுற்றுலாத் துறையை மேம்படுத்தமத்திய அமைச்சரவை செயலர் குழுசுற்றுலாத் துறையை மேம்படுத்தமத்திய அமைச்சரவை செயலர் குழு ... நாட்டின் காபி ஏற்றுமதி 20 சதவீதம் சரிவு நாட்டின் காபி ஏற்றுமதி 20 சதவீதம் சரிவு ...
பொது காப்பீட்டு நிறுவனங்கள் பிரிமிய வருவாய் 26 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2011
00:05

மும்பை:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாத காலத்தில், பொது காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த பிரிமிய வருவாய் 28 ஆயிரத்து 604 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதி யாண்டின், இதே ஆறு மாத காலத்தை விட, 26 சதவீதம் (22 ஆயிரத்து 744 கோடி ரூபாய்) உயர்வாகும் என காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (இரிடா) தெரிவித்துள்ளது. நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், யுனைடெட் இந்தியா, நேஷனல் இந்தியா மற்றும் ஓரியண்டல் இந்தியா உள்ளிட்ட நான்கு பொது காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் 25 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. தனியார் துறையைச் சேர்ந்த பொது காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாயும் 27 சதவீத அளவிற்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள்: பொதுகாப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் வளர்ச்சி கண்டுள்ள அதே நேரத் தில்,ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் 21 சதவீதம் சரிவடைந்துள்ளது.நடப்பு நிதியாண் டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின்,புதிய பாலிசி விற்பனை வாயி லான பிரிமிய வருவாய்,49 ஆயிரத்து 64 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே ஆறு மாத காலத்தில், 62 ஆயிரத்து 361 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது. கடந்த நிதியாண்டில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பாலிசி களின் பிரிமிய வருவாய் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டிருந்தது. ஆனால், பங்கு சார்ந்த காப்பீட்டு திட்டங்களில் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததை அடுத்து, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் சரிவடைந்துள்ளது. வளர்ச்சி: கடந்த ஆண்டு தொழில்துறை நல்லளவில் வளர்ச்சி கண்டிருந் ததையடுத்து,பாலிசி விற்பனை அதிகரித்து காணப்பட்டது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது, தற்போது தொய்வு நிலை காணப்படுகிறது. எனினும், வரும் மாதங் களில் பாலிசி விற்பனை சிறப்பான அளவில் அதிகரிக்கும் என ஐ.டீ.பி.ஐ. பெடரல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜி.வி. நாகேஸ்வரராவ் தெரிவித்துள்ளார். மதிப்பீட்டு காலத்தில், பொதுத் துறையை சேர்ந்த, ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் புதிய பாலிசி வாயிலான பிரிமிய வருவாய் 19.63 சதவீதம் சரிவடைந்துள்ளது. இது தவிர, தனியார் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாயும் 26 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இருப்பினும், ஒரு முறை மட்டும் செலுத்தக்கூடிய குழு காப்பீட்டு பிரிமிய வருவாய் மட்டும் 38 சதவீத அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)