பதிவு செய்த நாள்
04 நவ2011
12:45

கோழிக்கோடு : நாட்டின் முன்னணி ஆபரண நகைகள் வர்த்தக நிறுவனமான ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம், வர்த்தகத்தை விரிவுபடுத்தும் பொருட்டு, ஷாப்பிங் மால் வர்த்தகத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'மால் ஆஃப் ஜாய்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பிரிவு வர்த்தகத்திற்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 2 மில்லியன் சதுரஅடிகளுக்கு மேற்பட்ட மால்களை நாட்டின் 8 இடங்களில், அடுத்த 30 மாதங்களுக்குள் அமைக்கப்பட உள்ளது. முதல் மால், கோழிக்கோட்டில் அமைய உள்ளது. மற்ற மால்கள், திருச்சூர், கொச்சி, ஆலப்புழா, கோட்டயம், பாலக்காடு, திருவனந்தபுரம் மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் அமைய உள்ளது. இந்த புதிய மால்களில், ஆப்ரண நகைகள் வர்த்தகம் மட்டுமல்லாது, நவநாகரீக ஆடைகள், அழகுசாதனப் பொருட்கள், கைக்கடிகாரங்கள், காலணிகள், கண் கண்ணாடிகள், அழகு நிலையம், ரெஸ்டாரெண்ட்கள், புட் கோர்ட்கள் இதுமட்டுமல்லாது குழந்தைகள் விளையாடுவதற்கு விசாலமான இடம் உள்ளிட்டவைகளை கொண்டதாக இந்த மால்கள் அமைய உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|