பதிவு செய்த நாள்
06 நவ2011
13:01
புதுடில்லி : தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் இன்ஃபோசிஸ், இந்தியாவின் தலை சிறந்த நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. பெரு நிறுவன ஆளுமை, நிதி வெளியீடு கொள்கை, பங்குதாரர்கள் குறித்த விபரங்களை ஆன்லைன் மூலம் தெரிவித்தல் உள்ளிட்ட முதலீட்டாளர்களுடனான தொடர்பில் சிறந்த விளங்குவதால் இந்நிறுவனம், சிறந்த நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இன்ஃபோசிசை தொடர்ந்து கோடாக் மகேந்திரா வங்கி, பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ், இந்துஸ்தான் யூனிலெவர், நியூக்ளியர் சாப்ட்வேர் எக்ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சிறந்த நிறுவன ஆளுமை பிரிவின் கீழும், முதலிட்டாளர்களுடனான உறமுறை பிரிவின் கீழ் இன்ஃபோசிசை தொடர்ந்து விப்ரோ, கோடாக் மகேந்திரா வங்கி, டி.சி.எஸ்., உள்ளிட்ட நிறுவனங்களும் உள்ளன. சிறந்த இந்திய நிறுவனங்களின் பட்டியலில் டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி., ஐசிஐசிஐ வங்கி, ஆதித்யா பிர்லா நுவோ, கோத்ரேஜ் பிராப்பர்டிஸ் உள்ளிட்ட 80 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|