பதிவு செய்த நாள்
10 நவ2011
00:13

புதுடில்லி:கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு,சென்ற அக்டோபர் மாதத்தில், உள்நாட்டில் கார் விற்பனை, மிக வும் சரிவடைந்துள்ளது.சென்ற மாதத்தில்,கார்கள் விற்பனை,23.77 சதவீதம் வீழ்ச்சி கண்டு1 லட்சத்து 38 ஆயிரத்து 521 ஆக குறைந்துள்ளது. இது, கடந்தாண்டு அக்டோபரில், 1 லட்சத்து 81 ஆயிரத்து 704 ஆக இருந்தது என,இந்திய மோட் டார் வாகன தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூலப் பொருட் களின் விலை உயர்வு,வட்டி செலவினம் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு போன்றவற்றால்,கடந்த ஒரு சில மாதங் களாக, உள்நாட்டில் கார் விற்பனை குறைந்து வருகிறது.
மாருதி சுசூகி: கார் உற்பத்தி மற்றும் விற்ப னையில் முன்னணியில் உள்ள மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின், மானேசர் தொழிற்சாலையில்,பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால், கடந்த சில மாதங்களாக உற்பத்தி மிகவும் பாதிப்புக்குள்ளா னது. இதுவும் ஒட்டுமொத்த அளவில், கார் விற்பனை குறைவிற்கு காரணம் என, இச்சங்கத்தின் தலைமை இயக்குனர் விஷ்ணு மாத்தூர் தெரிவித்தார்.
நடப்பாண்டு ஜூலை மாதத்திலிருந்து, உள்நாட்டில் கார்கள் விற்பனை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த, 2000ம் ஆண்டு டிசம்பரில், கார்கள் விற்பனை, 39.86 சதவீதம் என்ற அளவில் மிகவும் சரிவடைந்திருந்தது. அதற்கு பிறகு, சென்ற அக்டோபரில் தான், இதன் விற்பனை மிகவும் குறைந்து போயுள்ளது.
பண்டிகை காலம்:பொதுவாக, அக்டோபர் மாதத்தில்,தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தில்,கார் விற்பனை சூடு பிடி த்து காணப்படும்.ஆனால்,இவ்வாண்டு,கார் விற்பனையில்,பெருத்த சரிவு ஏற்பட்டுள்ளது.இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும்,பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத் தை, பல முறை உயர்த்தியுள்ளது.
இதன் காரணமாக, வாகன கடனுக்கான வட்டி விகிதம் மிகவும்அதிகரித்துள்ளது.மேலும், பெட்ரோலிய பொருள்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவும், கார் விற்பனையின் சரிவு நிலைக்கு முக்கிய காரணமாகும்.குறிப்பாக, மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் மானேசர் தொழிற்சாலையில்,ஜூன் மாதம் முதல்,தொழிலாளர் பிரச்னையால்,அத் தொழிற் சாலையில் கார் உற்பத்தி மிகவும் குறைந்து போனது.இதற்கு எடுத்துக்காட்டாக,சென்ற அக்டோபர் மாதத்தில்,இந் நிறுவ னத்தின் கார் விற்பனை, 41 ஆயிரத்து 192 ஆக குறைந்து போனது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில் மேற்கொள் ளப் பட்ட விற்பனையை விட, 55.11 சதவீதம் (91 ஆயிரத்து 751 கார்கள்) குறைவாகும்.
ஹுண்டாய் மோட்டார்: இதே மாதங்களில், ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை, 5.31 சதவீதம் சரிவடைந்து, 34 ஆயிரத்து 651 என்ற எண்ணிக்கையிலிருந்து,32 ஆயிரத்து 811 ஆக சரிவடைந்துள்ளது.டாட்டா மோட் டார்ஸ் நிறுவனத்தின்,கார் விற்பனையும், 21 ஆயிரத்து 93 என்ற எண்ணிக்கையிலிருந்து, 20 ஆயிரத்து 948ஆக சற்று சரிவடைந்துள்ளது என இச்சங்கத்தின் புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.
கார்கள் மட்டுமின்றி,மூன்று சக்கர வாகனங்கள் விற்பனையும்,இதே மாதங்களில், 2.06 சதவீதம்குறைந்து,அதாவது, 50 ஆயிரத்து64 என்ற எண்ணிக்கையிலிருந்து,49ஆயிரத்து31 ஆக குறைந்துள்ளது.பயணிகள் வாகனங்கள் விற்பனையும், 20.25 சதவீதம் வீழ்ச்சி கண்டு,2 லட்சத்து 29 ஆயிரத்து 647 என்ற எண்ணிக்கையிலிருந்து,1லட்சத்து 83 ஆயிரத்து 143 ஆக சரிவடைந்துள்ளது.இருப்பினும், இரு சக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் விற்பனை வளர்ச்சி கண்டுள்ளது. அதாவது, கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அக்டோபர் மாதங்களில்,உள்நாட்டில் இரு சக்கர வாகனங்கள் விற்பனை, 2.01 சதவீதம் உயர்ந்து, 11 லட்சத்து 25 ஆயிரத்து 52 என்ற எண்ணிக்கையிலிருந்து,11 லட்சத்து 47 ஆயிரத்து 621 ஆகவும், வர்த்தக வாகனங்கள் விற்பனை, 18.53 சதவீதம் உயர்ந்து, 52 ஆயிரத்து 138 என்ற எண்ணிக்கையிலிருந்து,61 ஆயிரத்து 800 ஆகவும் அதிகரித்துள்ளது.இதே மாதங்களில், ஒட்டுமொத்த அளவில், அனைத்து வாகனங்கள் விற்பனை,1.05 சத வீதம் குறைந்து,14 லட்சத்து 56 ஆயிரத்து 901 என்ற எண்ணிக்கையிலிருந்து,14 லட்சத்து41ஆயிரத்து594ஆக குறைந் துள்ளது.
ஏற்றுமதி: இதே மாதங்களில்,உள்நாட்டில்,மேற்கொள்ளப்பட்ட வாகன உற்பத்தி,1.80 சதவீதம் குறைந்து,17 லட்சத்து 90ஆயிரத்து 267என்ற எண்ணிக்கையிலிருந்து,14 லட்சத்து 92 ஆயிரத்து 362 ஆக குறைந்துள்ளது. இருப்பினும்,வாகன ஏற்றுமதி, 14.55 சதவீதம் வளர்ச்சிகண்டு,1 லட்சத்து98ஆயிரத்து393 என்ற எண்ணிக்கையிலிருந்து,2 லட்சத்து 27 ஆயி ரத்து 252 ஆக உயர்ந்துள்ளது என இந்திய வாகன தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|