பதிவு செய்த நாள்
10 நவ2011
00:16

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று மோசமாக இருந்தது. மதியம் வரை, அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. இந்நிலையில், சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான, "மூடிஸ்,' இந்திய வங்கிகளின், செயல்பாடுகளுக்கான தரத்தை குறைத்து மதிப்பீடு செய்தது. இச் சூழ்நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின், இரண்டாவது காலாண்டிற்கான நிதி நிலை அறிக்கை வெளியானது.
இதில், இவ்வங்கியின் நிகர வசூலாகாத கடன், 11 ஆயிரத்து, 601 கோடியிலிருந்து, 16 ஆயிரத்து, 120 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்பதுடன், கடனுக்கான ஒதுக்கீடு, 2,160 கோடி யிலிருந்து, 2,920 கோடியாக அதிகரித்துள்ளது என்ற செய்தியால், இவ்வங்கியின் பங்குகள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த பங்கு வர்த்தகமும், கடைசி ஒரு மணி நேரத்தில் மிகவும் சரிவடைந்தது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில்,ரியல் எஸ்டேட்,உலோகம்,மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப்பங்குகளின் விலை சரிவடைந்தது. இருப்பினும், டி.சி.எஸ்.நிறுவனத்திற்கு,220 கோடி டாலர் மதிப் பிற்கு, புதிய ஆர்டர் கிடைத்துள்ளது என்ற செய்தியால், இந்நிறுவனத்தின் பங்குகள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தகவல் தொழில்நுட்ப நிறுவன பங்குகளின் விலையும் அதிகரித்திருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது,207.43 புள்ளிகள் சரிவடைந்து,17,362.10 புள்ளி களில் நிலைகொண்டது.
வர்த்தகத்தின் இடையே,இப்பங்குச் சந்தையின் குறயீட்டு எண், அதிகபட்சமாக,17,658.34 புள் ளி கள் வரையிலும், குறைந்த பட்சமாக, 17,331.23 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களில், 24 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், ஆறு நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தும் இருந் தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,"நிப்டி' 68.30 புள்ளிகள் குறைந்து, 5,221.05புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,317.50 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,211.75 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|