பதிவு செய்த நாள்
10 நவ2011
00:26

நடப்பு நிதியாண்டின், செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை, 1,457 நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இவற்றில், 10 நிறுவனங்கள் நீங்கலாக, இதர நிறுவனங்களின் நிகர லாபம் சரிவடைந்துள் ளது. மதிப்பீட்டு காலத்தில், நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1,457 நிறுவனங்களின் ஒட்டுமொத்த நிகர லாபம், சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில், 12 சதவீதம் சரிவடைந்து 59 ஆயிரத்து 265 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 67 ஆயிரத்து 633 கோடி ரூபாயாக இருந்தது.
நிகர லாபம்: கடந்த 2008ம் ஆண்டு முதல், இந்நிறுவனங்களின் நிகர லாபம், ஆண்டுக் கணக்கில் 12 சதவீதம் சரிவ டைந்து வருகிறது.இருந்தபோதிலும், இந்நிறுவனங்களின் செயல்பாட்டு வருவாய், 23 சதவீதம் உயர்ந்துள்ளதுமதிப் பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிறுவனங்களில்,10நிறுவனங்களின் நிகர லாபம்,சராசரியாக 32 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.அவைஓ.என்.ஜி.சி.,ரிலையன்ஸ்இண்டஸ்ட்ரீஸ்,என்.டி.பி.சி.,என்.எம்.டீ.சி.,இன்போசிஸ், ஐ.டி.சி., ஐ.சி. ஐ.சி.ஐ., வங்கி, இந்துஸ்தான் ஜிங்க், எச்.டீ.எப்.சி., பேங்க் மற்றும் இந்துஸ்தான் யூனிலிவர் ஆகும்.
மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் நடைபெறும் மொத்த நிறுவனங்களின்,சந்தை மூலதனத்தில்,இந்த 1,457 நிறுவ னங்களின் பங்களிப்பு 66 சதவீதமாக உள்ளது. இந்த பட்டியலில், நிகர லாப வளர்ச்சி கண்டுள்ள 10 நிறுவனங்களை நீக்கி விட்டால், இவற்றின் சந்தை மூலதன சதவீதம், மூன்றில் ஒரு பங்கு குறைந்திருக்கும்.
"சென்செக்ஸ்':மும்பை பங்குச் சந்தையில், "சென்செக்ஸ்'கணக்கிட உதவும்30 நிறுவனங் களில், 18 நிறுவனங்களின், இரண் டாவது காலாண்டு அறிக்கை வெளியிடப்பட்டுள் ளது.இதில் 15 நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி கண்டுள்ளது. நான்கு நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி, சரிவடைந்துள்ளது.இந்நிறுவனங்களின் நிகரலாபம்,சராசரியாக17 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
சர்வதேச பொருளாதார நெருக்கடி,மூலப்பொருட்களின் விலை உயர்வு, அதிகரித்து வரும் வட்டிச்சுமை, ரூபாயின் வெளி மதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், நிறுவனங்களின் நிகர லாபம் சரிவடைந்துள்ளது. அமெரிக்க டாலர்: மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலாண்டில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, 10 சதவீதம் சரிவடைந்துள்ளது.அன்னிய செலாவணி மதிப்பின் ஏற்ற, இறக்க பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில், இந்திய நிறுவனங்கள், குறிப்பிட்ட விலையில் வர்த்தகம் மேற்கொள்ள,வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து கொள்கின்றன.இந்த நடைமுறையை கடைபிடிக்க இயலாத நிறுவனங்கள்,ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் பார்தி ஏர்டெல்,பஜாஜ் ஆட்டோ, சேச கோவா,ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், செயில் மற்றும் ஜே.எஸ். டபிள்யூ ஆகிய நிறுவனங்கள், அன்னியச் செலாவணியிலான கடன்களை பெற்ற வகையில் இழப்பை சந்தித்துள்ளன.
சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில், விற்பனை அடிப்படையிலான மூலதனச் செலவினம், 36 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில் 34 சதவீதம் என்றளவில் இருந்தது. நிறுவனங்களின் வட்டிச் சுமை, 57சதவீதம் உயர்ந்துள்ளது. தகவல்தொழில் நுட்பம்,வாகனம்,வங்கி ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் வருவாய்,சந்தையாளர்களின் எதிர்பார்ப்பை விட அதிகரித்துள்ளது.அதே சமயம்,எண்ணெய் நிறுவனங்கள்,சிமென்ட், உலோகம்,பொறியியல் சாதனங்கள் ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனங்களின் வருவாய்,சந்தையாளர்கள் எதிர்பார் த்ததை விட குறைந்துள்ளது.
லாப வரம்பு: ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டவற்றுள், 32 வங்கிகள் நீங்கலாக, இதர நிறுவனங்களின் லாப வரம்பு, 3.5 சதவீதம் குறைந்துள்ளது,செயல்பாட்டு லாபம்,3.71 சதவீதம் சரிவடைந்து,21.98 சதவீதத்திலிருந்து,18.27 சதவீத மாக சரிவடைந்துள்ளதுநிகரலாப வரம்பு 3.52சதவீதம் குறைந்து,11.31 சதவீதத்திலிருந்து,7.61சதவீதமாக வீழ்ச்சி கண் டுள்ளது.
பொதுத்துறையைச் சேர்ந்த பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய இரு நிறுவனங்கள் ஒட்டு மொத்த மாக, 6,594 கோடி ரூபாயை நிகர இழப்பாக கண்டுள்ளன. இந் நிறுவனங்கள்,சென்ற நிதியாண்டின், இதே காலாண்டில் ஒட்டுமொத்த அளவில், 4,232 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.இது போன்று எட்டு உருக்கு நிறுவனங்களின் ஒட்டுமொத்த நிகர லாபம், 2,958 கோடி ரூபாயிலிருந்து, 1,536 கோடி ரூபாயாக சரிவ டைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|