மைக்கேல் ஜாக்சனின் மரண படுக்கை விற்பனைக்கு வருகிறதுமைக்கேல் ஜாக்சனின் மரண படுக்கை விற்பனைக்கு வருகிறது ... "புதிய தலைமுறை டிவி' பார்வையாளர் பட்டியலில் முதலிடம் "புதிய தலைமுறை டிவி' பார்வையாளர் பட்டியலில் முதலிடம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ரூ.8,000 கோடி பிரிமியம் திரட்ட இலக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2011
00:58

சென்னை:பொது காப்பீட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், நடப்பு 2011-12ம் நிதியாண்டில் 8,000 கோடி ரூபாய் பிரிமியம் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.இது குறித்து இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜி.சீனிவாசன் கூறியதாவது:
சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த அரையாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம், 56.61சதவீதம் அதிகரித்து, 218 கோடியில் இருந்து 341.07 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, 2010-11ம் முழு நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபத்தை விட இரண்டு மடங்கு உயர்வாகும்.இதே காலத்தில், நிறுவனத்தின் பிரிமிய வருவாய், 27 சதவீதம் அதிகரித்து 3,178 கோடியில் இருந்து, 4,033 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளாக, நிறுவனத்தின் பிரிமிய வருவாய் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது.
நடப்பு நிதியாண்டில், பிரிமியம் வருவாய், 25 சதவீதம் வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது. செப்டம்பருடன் முடிவடைந்த ஆறுமாத காலத்தில், நிறுவனத்தின் இழப்பீட்டு விகிதம்,83 சதவீதம் குறைந்துள்ளது.முதலீடுகளின் மீதான வருவாய், 803 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும்,நிறுவனம் மேற்கொண்ட முதலீடுகளின் சந்தை மதிப்பு,15 ஆயிரத்து 803 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்ற செப்டம்பர் வரையிலான மதிப்பீட்டின்படி, நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு 4,587 கோடி ரூபாயாக உள்ளது.
விரைவில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. தற்போது நிறுவனத்திற்கு 50 ஆயிரம் முகவர்கள் உள்ளனர். மேலும் அதிக அளவில் முகவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க உள்ளோம்.தமிழக அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இதிலும் பங்கேற்க உள்ளோம். இவ்வாறு ஜி.சீனிவாசன் தெரிவித்தார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)